வாணிப உரிமைகளை ஆங்கிலேயர் பெற்றனர். ஆங்கிலேயருக்கு
முன்னரே போர்ச்சுகீசியர்கள் இந்தியாவிற்கு
வந்து (கி.பி. 1498)
இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலுள்ள கோவாவை ஆட்சி
புரியவும் தொடங்கினர் (1510). போர்ச்சுகீசியரையடுத்து
டச்சுக்காரர்கள் இந்தியாவில் வாணிபத் தலங்களை அமைத்தனர்.
டேனர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோரும் இந்தியாவில்
வாணிபத் தலங்களை அமைத்தனர். இந்தியாவில் வாணிபத்திற்காக
வந்த மேற்கூறிய ஐரோப்பியர்களில் ஆங்கிலேயர்களே இறுதியில்
மிக்க செல்வாக்குப் பெற்று, தமிழகத்திலும் இந்தியாவின்
இதரப
பகுதிகளிலும் ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்றனர்.
கி.பி. 1600இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியை
தோற்றுவித்த ஆங்கிலேயர்கள் தென்இந்தியாவில்
மசூழிப்பட்டினத்தை முக்கிய வாணிப மையமாகக் கொண்டிருந்தனர்.
கி.பி. 1639இல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயரது முயற்சியின்
பலனாகச் சந்திரகிரியில் ஆட்சி புரிந்த விஜயநகர
மன்னரிடமிருந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார்,
சில வாணிப உரிமைகள் பெற்று, சென்னை பட்டினக் கடற்கறையில்
புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டி (1640) தங்கள்
வ
ாணிபத்தைப் பெருக்கினர்; புதுச்சேரிக்கு அருகில்
புனித டேவிட்
கோட்டையையும் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்கள்
புதுச்சேரியை
மையமாக வைத்துத் தங்கள் வாணிபத்தை நடத்தினர்.
டியூப்ளே
என்ற பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியின் ஆளுநராக
இருந்தபொழுது
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர் செல்வாக்கை ஏற்படுத்தி,
ஆங்கிலேயர் செல்வாக்கை ஒடுக்க முற்பட்டார். இத்தருணத்தில்
ஆற்காட்டு நவாபின் பதவிக்குப் போட்டியிட்ட சந்தாசாகிப்,
டியூப்ளேயின் உதவியை நாடினார். இதனால் வாணிபத்திற்காக
இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும்
கர்நாடக அரசியலில் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டது.
சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர் உதவியைப் பெற்று இரண்டாவது
கர்நாடகப் போரில் ஈடுபட்டார். இப்போரில்
கர்நாடக நவாப்
கொல்லப்பட்டார் (1749).
|