பக்கம் எண் :

12தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

அன்வாருதீன் இறந்தபின் அவரது மகன் முகமதலி வாலாஜா
கர்நாடக நவாபாக பதவியில் அமர விழைந்தார். ஆனால்,
சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரரின் உதவிபெற்று கர்நாடக நவாபாக
முற்பட்டார். இச்சூழ்நிலையில் முகம்மதலி ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின் உதவியை நாடிப் பெற்றார். அவருக்கு மைசூரின்
உதவியும் கிடைத்தது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச்
சேர்ந்த இராபர்ட் கிளைவின் ஆர்க்காட்டு வெற்றி (1751)யினால்
ஆங்கிலேயரது செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்தது.
ஆங்கிலப்படைகள் சந்தாசாகிபின் படைகளையும்
பிரெஞ்சுப்படைகளையும் திருச்சியில் தோற்கடித்து முகமதலியைக்
கர்நாடகத்தின் நவாப் ஆக்கின. மூன்று முறை நடந்த கர்நாடகப்
போர்களின் இறுதியில் (1761) தமிழகத்தில் பிரெஞ்சுக்காரர்களின்
செல்வாக்கு குறைந்து, ஆங்கிலேயரின் செல்வாக்கு அதிகரித்தது.
கர்நாடக நவாப் பதவிக்கு நவயத், வாலாஜா மரபினரிடையே
நடந்த போட்டியில் வாலாஜா மரபைச் சேர்ந்த முகமதலி வெற்றி
பெற்று கர்நாடக நவாபானார்.

தம்மைப் பதவியிலமர்த்த உதவிய ஆங்கிலேயர்களிடம்
ஆர்க்காட்டு நவாப் முகமதலி விசுவாசமாக நடந்துகொண்டார்.
ஆனால், இவர் தமது படை மற்றும் பாதுகாப்பிற்கு ஆங்கிலேயரின்
உதவியைப் பெற்றார். இதனால் ஆங்கிலேயரிடம் பெரிதும்
கடன்பட்டார். பெற்ற கடன், அதற்குச் செலுத்தவேண்டிய வட்டி
ஆகியவற்றிற்காக, கர்நாடகத்தின் வரிப்பணத்தில் பெரும்பகுதியை
நவாப் ஆங்கிலேயருக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
பின் ஒரு ஒப்பந்தத்தின்படி (1792) பாளையக்காரர்களிடம் வரி
வசூலிக்கும் உரிமையையும் கர்நாடக நவாப் (முகமதலி)
ஆங்கிலேயருக்குக் கொடுத்துவிட்டார்.

பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களும்

பாளையங்கள் என்ற ஆட்சிப் பிரிவுகள் மதுரை நாயக்க மன்னர்
விஸ்வநாதர் காலத்தில் (கி.பி 1535இல்) அமைக்கப்பட்டனவென்று
கருதப்படுகிறது. மதுரை நாயக்க அரசில் 72