பாளையங்கள் இருந்தன. பாளையங்களின் நிர்வாகத்தைக்
கவனித்தவர்கள், பாளையக்காரர்கள் ஆவர்;
இப்பாளைய
ஆட்சியில் காவல் முறையும், படைப்பாதுகாப்பும்
நில வருவாய்த்
திட்டமும் சிறப்பானவை.
பாளையக்காரர்கள்
தங்கள் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில்
வசூலித்த வரியில் ஒரு பகுதியை மதுரை நாயக்க மன்னருக்குக்
கப்பமாகச் செலுத்தினர். இவர்களிடம் சுதந்தரமான படைபலம்
இருந்தது. மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுற்றுக் கர்நாடக நவாபின்
ஆட்சி ஏற்பட்டபின் பாளையக்காரர்கள் கர்நாடக நவாபிற்கு கப்பம்
கட்டி வந்தனர். கர்நாடக நவாப் முகமதலி தாம் ஆங்கிலேயரிடம்
பட்ட கடனைத் திரும்பக் கொடுக்கும்வரை பாளையக்காரர்களிடமிருந்து
வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார்.
ஆனால், அன்னியரான ஆங்கிலேயரின் ஆதிக்கத்தைத் தங்கள்
பிரதேசத்தில் விரும்பாத பாளையக்காரர்கள் சிலர்
ஆங்கிலேயரை
எதிர்த்தனர்.
பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர்
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலக் கம்பெனியாருக்குத்
தொடக்கத்தில் அடங்கி ஆண்டு வந்தார். ஆனால்,
கட்டபொம்மனின் சுயமரியாதை ஜாக்சன் என்ற மாவட்ட
ஆட்சியாளரால் பாதிக்கப்படவே, கட்டபொம்மன் ஜாக்சனை
எதிர்த்தார். மேஜர் பானர் மேன் என்ற தளபதி தலைமையிலான
ஆங்கிலப்படை கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக்
கோட்டையைத் தாக்கி அழித்தது. தப்பிச் சென்ற கட்டபொம்மன்
பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் (1799). கட்டபொம்மனின்
மரணத்திற்குப் பின் அவரது சகோதரர் ஊமைத்துரை
ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். சிவகங்கைச் சீமையை
ஆட்சி புரிந்த மருது சகோதரர்கள், ஊமைத்துரை இதர சில
பாளையக்காரர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயரை
எதிர்த்துத் தீவிர மாகப் போராடினர் (1800-1801). ஆனால்,
ஆங்கிலேயர் பாளையக்காரர்களின் கலகத்தை அடக்கி, ஊமைத்துரை,
மருது சகோதரர்கள், இன்னும் பலரைத் தூக்கிலிட்டனர் (1801).
பாளையங்கள் ஜமீன்களாக மாற்றப்பட்டன.
|