பக்கம் எண் :

14தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

விஸ்வநாதரால் ஏற்படுத்தப்பட்ட பாளையக்கார
ஆட்சிமுறை ஆங்கிலேய ஆளுநர் எட்வர்டு கிளைவ்
ஆட்சியின்போது நீக்கப்பட்டது.

சென்னை மாநிலம் உருவாக்கப்படுதல்

ஆங்கிலேயருக்குத் தாம் பட்ட கடனைத் திருப்பிச்
செலுத்தாமலே, முகம்மதலி வாலாஜா 1795இல் காலமானார். இவர்
எழுதிக் கொடுத்த ஒப்பந்தப்படி (1792) தமது கடனை
ஆங்கிலேயருக்குத் திரும்பச் செலுத்தும்வரை கர்நாடகத்தில் வரி
வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். இதனால்
முகமதலி இறந்தபின் நவாபான அவரது மகன் உம்தத்-உல்-உம்ரா
பெயரளவில்தாம் நவாபாக இருந்தார். இவர் காலத்தில்தான்
கட்டபொம்மன் மரணமும் பாளையக் காரர்களின் தென்னிந்தியக்
கலகமும் ஏற்பட்டன. நவாப் உம்தத்-உல்-உம்ரா கி.பி. 1801இல்
காலமானார். இவருக்குப் பின் அலிஉசேன் என்பவர் நவாபானார்.
ஆனால் ஆங்கிலேயர்கள் அசிம் உத்தௌலா (முகமதலியின்
பெயரன்) என்பவருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு
(1801) கர்நாடகம் முழுவதையும் இந்தியாவிலுள்ள இதர ஆங்கில
ஆட்சிப் பகுதிகளுடன் இணைத்தனர். அசிம் உம்தௌலா “நாடு
இல்லாத நவாப்
” ஆனார். கர்நாடகத்தின் வருமானத்தில் ஒரு
சிறு பகுதியை மட்டும் இவர் பெற்றார்.

கர்நாடகத்தை இந்தியாவிலுள்ள ஆங்கில ஆட்சிப்
பகுதிகளுடன் இணைத்தவர், இந்தியாவில் ஆங்கிலேயர்
ஆதிக்கத்தை முற்றிலும் ஏற்படுத்த விரும்பிய கவர்னர்-ஜெனரல்
வெல்லெஸ்லி பிரபு ஆவார் (1798-1805).

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர்
திப்பு சுல்தானை வெல்லெஸ்லி பிரபு நான்காம் மைசூர்ப் போரில்
தோற்கடித்தார் (1799). திப்பு போர்க்களத்தில் வீர மரணம்
அடைந்தார். இவ்வெற்றியின் பயனாக ஆங்கிலேயருக்கு மைசூர்
அரசின் பகுதிகளான கோயம்புத்தூர், வைநாடு, தென்கன்னடம்,
ஸ்ரீரங்கபட்டணம் ஆகிய பகுதிகள் கிடைத்தன. மூன்றாவது
மைசூர்ப் போரில் காரன்வாலிஸ் பிரபுவிடம் திப்பு