தோற்றதன் விளைவாக மலபார், திண்டுக்கல், பாரமஹால்
பகுதிகளை ஆங்கிலேயர் பெற்றிருந்தனர் (1792).
வெல்லெஸ்லி
பிரபு தஞ்சையில் ஆண்ட மராட்டியரின் பகுதியையும் ஆங்கில
அரசின் செல்வாக்கிற்கு உட்படுத்தினார் (1799). கர்நாடகத்துடன்,
மைசூர் வெற்றியில் கிடைத்த பிரதேசங்களை இணைத்து,
கி.பி. 1801இல் வெல்லெஸ்லி பிரபு சென்னை மாநிலத்தை (Madras
Presidency) உருவாக்கினார். இது தமிழக வரலாற்றில்
குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி ஆகும்.
இவ்வாறு கி.பி. 1639இல் சென்னைப்பட்டினத்தில்
வியாபாரத்திற்காக காலடி வைத்த ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியார், கி.பி. 1801இல் சென்னை மாநிலத்தையும் இந்தியாவின்
இதர பல பகுதிகளையும் ஆட்சி புரியும் உரிமையைப் பெற்றனர்.
பாளையக்காரர்கள் ஒடுக்கப் பட்டபின் தமிழகத்தில் ஆங்கிலேயரை
எதிர்க்க யாருமில்லை. 1806இல் ஏற்பட்ட வேலூர்க் கலகத்தையும்
ஆங்கிலேயர் அடக்கினர். சென்னையில் நடந்த
‘வெள்ளைக்கலகத்தை’யும் நசுக்கினர். ஆந்திரக் கடலோரப்
பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை ஒடுக்கினர். தமிழகத்தில்
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு எதிர்ப்பற்ற
நிலை ஏற்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகம்
கி.பி. 1801முதல் 1947வரை தமிழ்நாடும் இந்தியாவின் இதர
பல மாநிலங்களும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தன.
கி.பி. 1801முதல் 1858 வரை ஆங்கிலேயர் ஆட்சியில்
கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆட்சியும் 1858 முதல் 1947வரை
இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சியும் இந்தியாவில் ஏற்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இன்றைய தமிழ்நாடு சென்னை
மாநிலத்தின் (Madras
Presidency) ஒரு பகுதியாக இருந்தது.
(கேரளத்தின் மலபார், கர்நாடக, ஆந்திர பிரதேச மாநிலங்களின்
பகுதிகளும் சென்னை மாநிலத்தில் அடங்கியிருந்தன.) சென்னை
மாநிலத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு ஆங்கில ஆளுநர்,
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயலாற்றினார். இவர்
கல்கத்தாவில் செயலாற்றிய கவர்னர் - ஜெனரலுக்கு உட்பட்டு
|