பக்கம் எண் :

108தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

10. பூம்புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து 29 கி.மீ.
தொலைவில் பூம்புகார் என்ற இடம் உள்ளது. காவிரிப்
பூம்பட்டினம் என்ற பெயரும் இதற்கு உண்டு. காவிரி நதி
வங்கக் கடலில் புகும் இடத்தில் அமைந்திருக்கும்
இடமாதலால் இப்பெயரைப் பெற்றுள்ளது.

பூம்புகாரின் பண்டையப் பெருமை

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் பண்டையச் சோழ
மன்னர்களின் தலைநகராகவும், துறைமுகமாகவும் பூம்புகார்
விளங்கியது. பண்டையத் தமிழர்களின் கடல் வாணிபத்தை
வளர்த்த மிகச்சிறந்த துறைமுகமாகப் புகார் விளங்கியது.
கி.பி. ஆண்டுத் தொடக்கக் காலத்தில் பன்னாட்டுத்
துறைமுகங்களில் ஒன்றாகப் புகார் திகழ்ந்தது. புகார் நகர
வணிகர்கள் கிரீஸ், ரோம் முதலிய மேல் நாடுகளுடனும், சீனா
வரையிலுள்ள கீழ்த்திசை நாடுகளுடனும் வாணிபம் புரிந்தனர்.
இங்கு மிளகு, முத்து, அகில், சந்தனம், உணவுப் பொருள்கள்
முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. குதிரைகள் முக்கியமாக
இறக்குமதி செய்யப்பட்டன.

பண்டைய புகார் நகரின் பெருமையைச் சங்க இலக்கிய
நூலான பட்டினப்பாலை விரிவாகக் கூறுகிறது. அகநானூறு,
புறநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களும் புகார் நகரைக்
குறிப்பிடுகின்றன. சங்க காலத்தில் பூம்புகார் மிகவும் பெரியதொரு
நகரமாகக் காட்சியளித்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய
காப்பியங்களும் புகார் நகரின் சிறப்பைக் கூறுகின்றன. டாலமி
எழுதிய பூமிநூல், புகாரை ‘காபேரிஸ் எம்போரியா’ என்கிறது.
‘பெரிப்ளஸ் மெரிஸ் எரித் ராய்’ என்ற நூலிலும் புகாரின்
சிறப்பு கூறப்படுகிறது. சங்க காலச் சோழ மன்னர்கள் ஆட்சிக்
காலத்தில் புகார் சிறந்த நகராகத் திகழ்ந்தது. புகார் நகரைத்
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்,
காவீரன்,
காகந்தன், முசுகுந்தன், மனுநீதிச் சோழன் போன்ற புராணங்கள்
கூறும் மன்னர்களும் கரிகாற்பெருவளத்தான், கிள்ளிவளவன்
போன்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த சோழ மன்னர்களும்