ஆண்டிருக்கிறார்கள். முதலில் கூறப்பட்ட மன்னர்
காலத்தில்
இங்கு ‘இந்திர விழா’ சிறப்பாக நடந்ததாம்.
சங்க காலப் புகார் நகரம் திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்தது. மருவூர்ப்பாக்கம் என்ற கடற்கரைப்
பகுதியையும், பட்டினப்பாக்கம் என்ற நகரின் முக்கியப்
பகுதியையும் பண்டைய புகார் கொண்டிருந்தது. இங்குச் சைவ,
வைணவ ஆலயங்கள் சிறந்து திகழ்ந்தன. புகாரில்
பௌத்த
சமயம் சிறந்து விளங்கியதைச் சிலப்பதிகாரமும்,
மணிமேகலையும்
குறிப்பிடுகின்றன.
தொல்பொருள் ஆய்வுத்துறையினர்
புகார்ப்பகுதியில்
நடத்திய ஆய்வுகளில் கிடைத்த பண்டைய சோழர்கால
நாணயங்கள், ரோமாபுரி நாணயங்கள், மிகப்பெரிய செங்கற்கள்,
கிணறுகள், புத்த விகாரம், புத்த பாதம், படகுகளை நிலை
நிறுத்தப் பயன்படும் மரங்கள், 1976இல் அகழ்ந்து காணப்பட்ட
செங்கற் கட்டடப்பகுதி ஆகிய யாவும் பண்டைய புகார் நகரின்
பெருமையை உறுதிப்படுத்துகின்றன.
சங்ககால முடிவுவரை (கி.பி. 3ஆம் நூற்றாண்டு) பண்டைய
சோழரின் ஒரு தலைநகராகவும், துறைமுகமாகவும் விளங்கிய
புகார் நகரம், கடல் கோள் காரணமாகப்
பிற்காலத்தில்
சிறப்பிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தஞ்சைச் சோழர்கள்
ஆட்சிக் காலத்தில் (கி.பி.9-13
நூற்றாண்டு) புகார்ப்பகுதியில் பல ஆலயங்கள் எழுந்தன.
புகார்ப் பகுதியில் கிடைத்த வெண்கலப் படிமங்கள், இதர பல
பொருள்கள், சென்னை அரசு அருங்காட்சியகத்திலும், தஞ்சைக்
காட்சிக் கூடத்திலும் உள்ளன.
பூம்புகாரின் இன்றைய சிறப்பு
பண்டையத் தமிழ் மக்கள் பண்பாட்டின் ஒரு முக்கிய
மையமாக விளங்கிய புகார் நகரை நாம் நினைவுகொள்ளும்
வகையில் தி.மு.க.அரசின் முயற்சியால், 1973ஆம் ஆண்டு
ஒரு சிற்பக் கலைக்கூடம் புகாரில் அமைக்கப்பட்டது.
சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன்-கண்ணகி
பிறந்து
வளர்ந்த இடம்
|