பூம்புகார் ஆகும். எனவே, கோவலன்-கண்ணகியின் கதையை
விளக்கும் சிற்பக் கலைக்கூடம் ஒன்று புகாரில்
அமைக்கப்பட்டது.
இக்கலைக்கூடம் எழுநிலை மாடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கலைக்கூடத்தின் ஒரு பகுதிச் சுவர்களில் கண்ணகியின்
வரலாற்றில் வரும் பல காட்சிகள் 49 சிற்பத் தொகுதிகளில்
அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் சிலப்பதிகார
நிகழ்ச்சிகளைக் கூறும் இக்கலைக்கூடம் தற்காலச் சிற்பிகளின்
கைத்திறனைக் காட்டுகிறது. கலைக்கூடக் கட்டடப்பகுதியில்
மாதவிக்கு நெடிய கற்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
கலைக்கூடத்திற்கு அருகில்
இலஞ்சி மன்றம், பாவை
மன்றம், நெடுங்கல் மன்றம் ஆகிய மன்றங்கள் உள்ளன.
மேற்கூறிய பெயர்களை உடைய மன்றங்கள் பண்டைய புகார்
நகரில் இருந்தனவென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பண்டைய
மன்றங்களை நினைவுகூரும் வகையில் இன்றைய மன்றங்கள்
உள்ளன. இவை 1975ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டன.
பாவை மன்றத்திலும், இலஞ்சி மன்றத்திலும் நிறுவப்பட்டுள்ள
பாவையரின் சிலைகள் கலையழகு படைத்தவை. நெடுங்கல்
மன்றத்தில் சுமார் 17 மீட்டர் உயரமுள்ள ஒரு நெடிய
கற்றூணும், அதைச்சுற்றி 8 சிறிய கற்றூண்களும், 8
மனிதர்களின் உருவங்களும் உள்ளன. முற்றிலும் கல்லிலே
உருவான இச்சிற்பம் தற்கால, சமயச்சார்பற்ற சிற்பக்
கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். பூம்புகாரிலுள்ள
தற்காலச் சிற்பங்கள் மாமல்லபுரத்திலுள்ள சிற்பப் பயிற்சிப்
பள்ளியினரால் உருவாக்கப்பட்டவையாகும். புகார்
நகரின்
சமயச் சார்பற்ற சிற்பங்கள் நமது கலைச் செல்வங்களாகும்.
புகார் நகரையடுத்து
பழமைமிக்க கோவில்கள் பல
உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று பல்லவனீச்சுரம்
ஆகும். புகார் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருவெண்காடு
என்ற இடம் உள்ளது. இங்கும் ஒரு புகழ் பெற்ற
சிவாலயம்
உள்ளது.
|