கோவிலைச் சுற்றியுள்ள பிராகாரத்தில்
உத்தர கைலாச
அம்மன் கோவில், சண்டிகேஸ்வரர் கோவில், தக்ஷிண
கைலாசம், மகிசாசுரமர்தினி கோவில் ஆகியவை
உள்ளன.
கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தமிழ்மக்கள்
பண்பாட்டின் பெருமையைக் கூறும் ஓர் உன்னதச் சின்னம்
ஆகும். இக்கோவில் முதலாம் இராசேந்திர சோழன் நமக்கு
விட்டுச் சென்றுள்ள தலைசிறந்த மரபுரிமைச் செல்வம் ஆகும்.
தஞ்சைச் சோழர்கள் ஆட்சிக்காலம் ‘தமிழகக் கோவில்
வரலாற்றில் பொற்காலம்’ என்பதை உலகிற்குக்
காட்டும்
கலைக் கோவிலாகும்.
|