பக்கம் எண் :

152தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

16. ஸ்ரீரங்கம்

திருச்சி நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் ஸ்ரீரங்கம்
உள்ளது. (திருவானைக்காவிலிருந்து 2 கி.மீ.) காவிரி நதிக்கும்
அதன் கிளை நதியான கொள்ளிடத்திற்கும் இடையிலுள்ள
தீவில் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்தின் புகழுக்குக்
காரணம் இங்குள்ள ரெங்கநாதர் கோவில் ஆகும்.

‘கோவில்’ என்றாலே சைவத்தில் சிதம்பரம் நடராசர்
கோவிலையும், வைணவத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
கோவிலையுமே சிறப்பாகக் கூறுவது வழக்கம். ஸ்ரீரங்கம்
கோவில் இந்தியாவிலுள்ள முக்கியப் புனிதத் தலங்களில்
தலைசிறந்த ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள மிகப்பெரிய
வைணவ ஆலயமாகும்.
ஆழ்வார்கள் பதின்மராலும்,
ஸ்ரீஆண்டாள் நாச்சியாராலும் புகழ்ந்து துதிக்கப்பெற்ற
சிறப்புமிக்கது. இதனைப் பெரிய கோவில் என்றும், பூலோக
வைகுண்டம்
என்றும் போக மண்டலம் என்றும் போற்றுவர்.

கோவிலின் வரலாறு

ஸ்ரீரங்கம் கோவில் மிகத் தொன்மை வாய்ந்தது, சங்க
இலக்கிய நூலாகிய சிலப்பதிகாரத்திலும், நாலாயிரத்திவ்யப்
பிரபந்தங்களிலும், இக்கோவிலைப்பற்றிய அழகிய வருணனைகள்
உள்ளன. இக்கோவிலின் கட்டட வடிவம் முதன்முதலில்
தர்மவர்மன்
என்ற சோழமன்னர் காலத்தில் அமைக்கப்
பட்டதாகக் கூறப்படுகின்றது. தர்மவர்மன் அமைத்த கோவில்
காவிரி நதியின் வெள்ளத்தால் புதையுண்டது என்றும், பின்
அவர் வழித்தோன்றிய மற்றொரு சோழ மன்னரால் கோவிலின் மூலஸ்தானம்
கண்டுபிடிக்கப்பட்டுப் புதுப்பித்துக்
கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலின் நான்காம்
திருமதிலை கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக்
கருதப்படும் திருமங்கையாழ்வார் கட்டியதாகக் கூறப்படுகின்றது.

கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலைப்பற்றி
அறிய கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. முதலாம் பராந்தகச்