பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்153

சோழன் (907-953) இக்கோவிலுக்கு ஒரு வெள்ளிக்
குத்துவிளக்கு அளித்ததை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.
இரண்டாம் இராசேந்திரனின் புதல்வன் இராசமகேந்திர
சோழன்
(1060-1063) இக்கோவிலின் முதலாம் பிரகாரத்தின்
திருமதிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது அவர் பெயரால்
‘இராச மகேந்திரன் வீதி’ என அழைக்கப்படுகிறது.

வைணவப் பெரியார் இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில்
தங்கி விசிஸ்டாத்வைதம் என்ற வைணவ நெறியைப் போதித்தார்.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அம்மன்னரது சமயக்
கொள்கையால் துன்புற்ற இராமானுஜர் ஒய்சள அரசின் ஒரு
பகுதியாக இருந்த மைசூருக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து சென்றார்.
(ஸ்ரீரங்கத்தில்தான் வடகலை, தென்கலை வைணவங்கள்
தோன்றித் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டன.)

கி.பி. 1223முதல் 1255வரை இக்கோவில் மைசூர்ப்
பகுதியை ஆட்சி புரிந்த கங்கர்கள் என்பவர்களால் கவர்ந்து
கொள்ளப்பட்டது. பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்ம
சுந்தர பாண்டியன்
(1216-1238) ஸ்ரீரங்கத்தைக்
கங்கர்களிடமிருந்து விடுவித்தார். இவர் இக்கோயிலுக்குப்
பல தானங்களையும் வழங்கினார்.

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கண்ணனூரை (சமயபுரப்
பகுதி) மாநிலத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த ஒய்சள
மன்னன் சோமேசுவரன் (1234-1262) இக்கோவிலுக்கு ஒரு
நந்தவனத்தையும், மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சாலையையும்
ஏற்படுத்தினார் என்று ஒரு கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.
இக்கோவிலிலுள்ள வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதி
ஒய்சளர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதேயாகும்.

சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1251-1268)
இக்கோவிலில் விஷ்வக்சேனர் சந்நிதி, மகாவிஷ்ணு
சந்நிதி, விஷ்ணு நரசிம்மர் கோபுரம்,
மூன்று விமானங்கள்,
திருமடைப் பள்ளி ஆகியவற்றைக் கட்டினார், கோவிலின் சில
பகுதிகளைப் பொன்னால் வேய்ந்தார். கடக அரசரைப் (Cuttack,
Orissa
) போரில் வென்று, அவரது கருவூலத்திலிருந்து
கைப்பற்றிய