பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்155

இவ்வாறு கி.பி. 10ஆம் நூற்றாண்டுமுதல் 17ஆம்
நூற்றாண்டுவரை சோழர், பாண்டியர், ஒய்சளர், விஜயநகர
அரசர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளால்
ஸ்ரீரங்கம் கோவில் இன்று நாம் காணும் தோற்றத்தினைப்
பெற்றுள்ளது.

18ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடகப் போரின்பொழுதும்,
மைசூர்ப் போரின் பொழுதும் இக்கோவில் பல தாக்குதல்களுக்கு
உட்பட்டது. 1781இல் ஹைதரும், 1790இல் திப்புவும்
இக்கோவிலின்மீது படையெடுத்தனர்.

ஸ்ரீரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய
1966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு
நிறுவனம்
(UNESCO) இக்கோயிலுக்குத் தொழில்நுட்ப உதவி
அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர்,
ஜார்ஜ்ரைட், ஜு னைன் அபோயர்
ஆகிய நிபுணர்களின்
சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற
பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு
ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

கோவிலின் சிறப்பு

1.ஸ்ரீரங்கம் செங்கநாதர் கோவில் மிக்க பழமையும்
பெருமையும் வாய்ந்தது. இக்கோவிலின் கருவறையில்
ரெங்கநாதசுவாமி. ஆதிசேடனாகிய அரவணையின்மீது
வலப்பக்கமாகச் சாய்ந்துகொண்டு காட்சி தருகிறார், பெருமாளின்
திருவுருவம் 6.4 மீட்டர் நீளமுள்ளது. குழை காரையி (
Stucco)
லானது. மூலஸ்தானத்தின்மீது அமைந்திருக்கும் விமானம்
பொன் வேயப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது. ரெங்கநாத
சுவாமியை வழிபட இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும்,
வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர். ஒவ்வோர்
ஆண்டும், (டிசம்பர் மாதம்) வைகுண்ட ஏகாதசி விழா
இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.

2. ஸ்ரீரங்கம் கோவில் இந்தியாவிலேயே மிகப்
பெரியது எனக் கருதப்படுகிறது. பெருமாளின் கருவறையைச்
சூழ்ந்து இக்கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன.