பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்17

இந்தியச் சுதந்தரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை விரும்பாத
போர் வீரர்கள், சில இந்திய மன்னர்கள், பொது மக்கள் ஆகியோர்
1857-58இல் இந்தியாவின் வட பகுதிகளில் ஒரு பெரிய இராணுவப்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் முதல் சுதந்தரப்
போர்
எனப்படுகிறது. ஆனால், ஆங்கிலேயர்கள் இப்போராட்டத்தை
ஒடுக்கினர். 1857 - 58 போராட்டம் தமிழகம் முதலிய தென்னிந்தியப்
பகுதிகளில் ஏற்படவில்லை. ஆனால், ஆங்கிலேயரை எதிர்த்து
நடந்த போராட்டங்கள் தமிழக வரலாற்றில் 1857-க்கும்
முன்னதாகவே உள்ளன. நெற்கட்டுஞ் செவ்வல் பாளையக்காரர்
பூலித்தேவர் சிவகங்கையில் ஆட்சி புரிந்த மருது சகோதரர்கள்,
பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன்,
அவர் சகோதரர் ஊமைத்துரை, திண்டுக்கல் பாளையக்காரர்
கோபால் நாயக்கர்
ஆகியோர் தமிழகத்தில் அன்னியரான
ஆங்கிலேயரை 1857-க்கு முன் எதிர்த்துப் போரிட்டவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்தியத் தேசியப் போராட்டம் 1885இல் இந்தியத் தேசிய
காங்கிரஸ்
அமைக்கப்பட்டபின் விறுவிறுப்படைந்தது. இந்தியத்
தேசிய காங்கிரஸ் ஒரு பிரிவாகத் ‘தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற
ஸ்தாபனம் தோற்றுவிக்கப்பட்டது.

தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரின் (1882-1921) இனிய
எளிய நாட்டுப்பற்றுமிக்க பாடல்கள் தமிழ் மக்களிடையே சுதந்தரத்
தாகத்தை வளர்த்தன.

‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும், ‘செக்கிழுத்த செம்மல்’
என்றும் போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)யின்
வீரச் செயல்கள் இந்தியச் சுதந்தரப் போராட்டத்தில்
குறிப்பிடத்தக்கனவாகும். இவர் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக்
கப்பல் கம்பெனி ஒன்றைத் தூத்துக்குடியில் நடத்திய
பெருமைக்குரியவராவர். 1908இல் சூரத் காங்கிரசில் மிதவாதிகளை
எதிர்த்துப் போராடித் தீவிர இயக்கத்திற்கு அடிகோலியவர்களில்
வ.உ.சி.யும் ஒருவராவார். வாஞ்சிநாத ஐயர் 17-6-1911இல்
மணியாச்சி