பக்கம் எண் :

170தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மலையின் அடிவாரத்தில்(தென்புற வீதியிலுள்ள அக்ரகாரச்
சந்தின் அருகில்) மற்றொரு குடைவரைக் கோவில் உள்ளது.
மலையின் உயரே இருக்கும் குடைவரைக் கோவிலைவிட இது
உருவில் பெரியது; அழகில் சிறந்தது. இக்குடைவரைக் கோவில்
பாண்டியர் காலத்தது என்று கூறப்படுகிறது. இக்குகைக்கோவிலில்
இரு கருவறைகள் உள்ளன. இவை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்
உரியவை. தற்பொழுது வழிபாடு இல்லை. கருவறை முன்னுள்ள
மண்டபச் சுவர்களில் பிரமன், கணேசர், சுப்ரமணியர்,
சூரியன், துர்க்கை
ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள்
வியக்கத்தக்க சிற்பப் படைப்புகளாகும்.

திருச்சி மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள
மேற்கூறிய இரு குடைவரைக் கோவில்களும் நமது
பண்பாட்டின் பெருமைக்குரிய சிறந்த சான்றுகளாகும்.
இவை இந்தியத் தொல்பொருள் துறையினரின் (A.S.I)
பாதுகாப்பில் உள்ளன.

உறையூர்க் கோவில்கள்

உறையூரில் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், நாச்சியார்
கோவில், வெக்காளியம்மன் கோவில்
ஆகியவை உள்ளன.

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் நாட்டுக்கோட்டை நகரத்
தார்களின் திருப்பணியினால் மிக்கச் சிறப்புடன் காட்சியளிக்கிறது.
இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள தூண்கள் சிறந்த சிற்ப
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. சுவாமியின் கருவறையும்,
அம்மனின் கருவறையும் முற்றிலும் கல்லினாலாகியது. கருவறைச்
சுவர்கள் நுட்பமான சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
இரு சந்நிதிகளின் வாயிலின் உச்சிப்பகுதிகளில் காணப்படும்
சிற்பங்கள் நேர்த்தியானவை. அம்மனின் கருவறைச் சுவரில்
‘கோழியும் யானையும்’ என்ற புடைப்புச் சிற்பம் உள்ளது.
மதம் பிடித்த யானையை ஒரு கோழி அடக்கும் ஒரு
புராணக் கருத்தை இச்சிற்பம் எடுத்தியம்புகிறது. உறையூருக்குக்
‘கோழியூர்’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.