சேலம் நகரின் மத்தியில்
கிறிஸ்து ஆலயம் உள்ளது.
இது தென்னிந்தியத் திருச்சபையினருக்குரியதாகும்.
கி.பி. 1875இல் இவ்வாலயம் தோற்றுவிக்கப்பட்டது.
கிறிஸ்து ஆலயத்திலிருந்து சிறிது தொலைவில் லெக்லர்
நினைவு ஆலயம் உள்ளது. இது கி.பி. 1856இல்
தோற்றுவிக்கப்பட்டது. இதுவும் தென்னிந்தியத்
திருச்சபையினருக்குரியதாகும்.
பள்ளிவாசல்கள்
சேலம் நகரில்
பழமையான பள்ளிவாசல் கோட்டைப்
பகுதியில் உள்ளது. மணிமுத்தாற்றின் கரையில்
உள்ள ஜீம்மா
மசூதி திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டது
என்றும்,
இங்கு திப்பு சுல்தான் தொழுகைக்காக வருகை தந்துள்ளார்
என்றும் கூறப்படுகிறது. முகமதுபுரத்திலுள்ள பள்ளி
வாசல்
ஜமால் மொகைதீன் என்ற வணிகரால் கட்டப்பட்டதாகும்.
அரசு காட்சிக்கூடம்
சேலம் நகரில்
ஓமலூர் சாலையில் மாநில அரசின் காட்சிக்
கூடம் (Museum) உள்ளது. இக்காட்சிக் கூடம் 1976ஆம்
ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவிக்க சேலம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சுவாமிநாதன் I.A.S. முக்கியப்
பங்கெடுத்தார். சேலம் மாவட்டப் பகுதியில் கிடைத்த சிற்பங்கள்
முதலிய தொல்பொருள்கள், சேலம் பகுதியில் உள்ள மரவகைகள்,
பாறை வகைகள், கனிமங்கள், தாவர இயல், புவி இயல் முதலிய
துறைகளைச் சார்ந்த காட்சிப் பொருள்கள், நடுகற்கள்,
நாமக்கல்
கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பயன்படுத்திய சில
பொருள்கள் ஆகியவை காட்சிக்கூடத்தில் இடம் பெறுகின்றன.
சேலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில்
ராசிபுரம் உள்ளது.
இங்குக் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார்
700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சேலத்திலிருந்து 32
கி.மீ. தொலைவில் பேலூர் உள்ளது. இங்குத் தான்தோன்றீஸ்வரர்
என்ற சிவனுக்குரிய கோவில் உள்ளது.
சேலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில்
ஏற்காடு உள்ளது.
இது ஒரு மலைவாழிடம் ஆகும். சேர்வராயன் மலைப்
|