பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்183

பகுதியில், சுமார் 1300 மீட்டர் உயரத்தில் இவ்விடம்
அமைந்துள்ளது. இங்குக் காப்பித் தோட்டங்கள்,
பழத்தோட்டங்கள் ஆகியவை மிகுதியாக உள்ளன.
இங்குள்ள மான்ட்போர்டு பள்ளி புகழ்மிக்கது.

சேலத்திலிருந்து 52 கி.மீ. தொலைவில் மேட்டூர் அணை
உள்ளது. மேட்டூர் அணை உலகிலுள்ள பெரிய அணைகளில்
ஒன்றாகும். இது தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய அணை ஆகும்.
காவிரி நதியின் குறுக்கே இது கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின்
பொருளாதார வளத்திற்கு முக்கிய அணையாக இது உள்ளது.
இவ்வணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1934ஆம்
ஆண்டு கட்டப்பட்டது. கி.பி. 1937இல் இங்கு நீர்மின் சக்தி
திட்டம் அமைக்கப்பட்டது. இரஷிய நாட்டின் உதவியுடன்
சுரங்க மின் உற்பத்தி நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இரசாயன உற்பத்தி ஆலை, அலுமினிய உற்பத்தி ஆலை
ஆகியவையும் மேட்டூரில் உள்ளன.

சேலத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் ஆத்தூர் உள்ளது.
இங்குக் கட்டி முதலிகளால் கட்டப்பட்ட கோட்டை அவர்களது
நினைவுச் சின்னமாக இன்று உள்ளது.

தாரமங்கலம்

சேலம் மாவட்டத்தில், சேலம் நகரிலிருந்து 24 கி.மீ.
தொலைவில் தாரமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குப் புகழ்
பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. சிவபெருமானுக்கும்
பார்வதிக்கும் இங்குத் திருமணம் நடந்ததென்றும், திருமால்
பார்வதியைத் தாரை வார்த்துக் கொடுத்து மங்கல வினை
நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்தது என்றும்
கூறுவர். இவ்வாலயத்தின் ஒரு பகுதி கி.பி. 13ஆம்
நூற்றாண்டிலேயே இருந்தது எனப்படுகிறது. கி.பி. 17ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்வாலயத்தின் பெரும்பகுதி
உருவானது. கட்டி முதலிகள் என்ற பாளையக்காரர்கள்
இக்கோவிலைப் பெரிதும் உருவாக்கினர். இக்கோவில் கட்டி
முதலிகளின் குலதெய்வக் கோவிலாக விளங்கிற்று.
வணங்காமுடி
கட்டி முதலி