தாரமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 17ஆம்
நூற்றாண்டில் ஆட்சி புரிந்தார். கி.பி. 1678இல் மைசூர்
பாலசுப்பிரமணியர் என்பவரால் தாரமங்கலக் கோவிலின்
உட்பிரகாரத்திலுள்ள அறுபத்து மூவர் சந்நிதி
வழிபாட்டிற்கு
வைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 1976ஆம் ஆண்டு
‘பாதாள லிங்கம்’ வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது.
இக்கோவிலின் இறைவர் ‘கைலாச நாதர்’ கருவறையில்
லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்மன் சிவகாமி
எனப்படுகிறார். நடராசருக்கும், முருகப்பெருமானுக்கும்
அழகிய சந்நிதிகள் உள்ளன.
சிற்பக் கலைச்சிறப்பு
தாரமங்கலம் கைலாசநாதர்
கோவில் சிற்பங்கள் தமிழகச்
சிற்பக் கலைத்திறனுக்கு உறைவிடமாக
விளங்குகின்றன. இங்குள்ள
சிற்பங்களின் சிறப்பு பின்வருமாறு :
1. ஆலயத்தின் மதிலில் மீன்கள் முதலிய புடைப்புச்
சிற்பங்களை அமைத்திருப்பது புதுமையாக உள்ளது.
2. உட்பிரகாரத்திற்கு நுழையுமிடத்திலுள்ள
ஆறு தூண்கள்
உள்ள மண்டபம் ஒரு சிறந்த கலைப்படைப்பு ஆகும். நான்கு
தூண்களில் குதிரையுடன் வீரர்களும், இரண்டில் யாளிகளுடன்
வீரர்களும் காணப்படுகின்றனர். இத்தூண்கள் விஜயநகரக்
கலைப் படைப்பினைப் பின்பற்றி எழுந்தவையாகக்
கருதப்படுகின்றன. ஒற்றைக்கல்லினாலான இத்தூண்கள் யாவும்
வேலைப்பாடுமிக்கவை. குதிரைவீரன் உள்ள தூணை அருகில்
இருந்து பார்த்தால் இரு உருவங்கள் தெரிகின்றன. ஆனால்,
ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்பொழுது ஒரு வீரன் மட்டும்
குதிரை மீது சவாரி செய்வது இயற்கையாகக் காணப்படுகிறது.
சிறுத்தையை வீரன் வேலால் குத்தும் காட்சி, கத்தி சிறுத்தையின்
உடலில் புகுந்து வெளியே வரும் காட்சி ஆகியவை இதை
அமைத்த சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன. ஒரு
தூணில், யாளியின் வாயினுள் 10 செ.மீ. விட்ட
|