முள்ள கல்உருண்டை சுழலும் நிலையில் ஆனால் வெளியே
எடுக்க முடியாதபடி உள்ளது. (இது போன்ற சிற்ப அமைப்பு
மதுரை அழகர் கோவிலிலும் இதர சில இடங்களிலும் உள்ளன.)
ஆறு தூண்களைத் தாங்கி நிற்கும் மண்டபத்தின் கொடுங்கைகளில்
குரங்கு, உடும்பு போன்ற மிருகங்கள் இயற்கையான
பாவனையில்
செதுக்கப்பட்டுள்ளன.
3. மகாமண்டபம் இவ்வாலயத்தின் கலைச் சிறப்புமிக்க
பகுதியாகும். இம்மண்டபத்திலுள்ள கற்றூண்கள் யாவும்
அக்காலச்
சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டில்
உருவானவையாகும்.
இம்மண்டபத்திலுள்ள புகழ்மிக்க சில சிற்பங்களின் பெயர்கள்
பின்வருமாறு :
1. ரிஷிபத்தினி.
2. ஊர்த்துவத் தாண்டவர்.
3. சிவசக்தி - கோபம்.
4. சிவசக்தி - சாந்தம்.
5. அகோர வீரபத்திரர்.
6. காளி நர்த்தனம்.
7. அக்னி வீரபத்திரர்.
8. இட பாந்தக மூர்த்தி.
9. பிச்சாடனர்.
10. கிளிமீது மன்மதன்.
11. அன்னத்தின்மீது
ரதி.
12. இராமர் வாலியை அம்பெய்யுங் காட்சி.
13. வாலியும் சுக்ரீவனும்
சண்டையிடும் காட்சி.
மேற்கூறிய சிற்பங்களும் இதர பல சிற்பங்களும் உன்னத
கலைக் கருவூலங்கள் ஆகும். இவை கல்லில் கதையும்
புராணமும்
கூறுகின்றன. இறைவனின் சந்நிதிக்கு எதிரே
|