பக்கம் எண் :

186தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மகாமண்டபத்தின் உச்சியிலுள்ள யாளியின் வாயில் சுழலும்
கல் உருண்டைகள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப்பகுதியில்
காணப்படும் கவிழ்ந்த தாமரை மலர்கள், அவற்றின் இதழ்களைக்
கொத்தும் கிளிகள், அவற்றின் அருகில் தொங்கும் சங்கிலிகள்
ஆகிய யாவும் ‘சிற்ப விநோதங்கள்’ ஆகும்.

உட்பிரகாரத்தில் கருவறையின் பின்புறமுள்ள ஒரு தூணில்,
யாளியின் வாயில் கல் உருண்டை உருட்ட முடியாதபடி உள்ளது.
இது, இதை அமைத்த சிற்பியின் திறமையினை எடுத்தியம்புகிறது.

மகா மண்டபத்தின் ஒரு மூலையில் ‘பாதாள லிங்கம்’
உள்ளது.

4. இறைவனின் கருவறை, மகாமண்டபத்திலுள்ள இதர
சந்நிதிகள் ஆகியவை முற்றிலும் கல்லினாலானவை. இவை
வேலைப்பாடுமிக்கவை.

5. சித்திவிநாயகருக்கு ‘ஒன்பதே கற்களினாலான’ காரை
கலப்பற்று அமைக்கப்பட்ட சந்நிதி உள்ளது.

6. நந்தி மண்டபம் சிற்ப வேலைப்பாடுமிக்கது.

7. இக்கோவிலிலுள்ள கோபுர வாயிற்கதவுகளில் அழகிய
மரச்சிற்பங்கள் உள்ளன.

8. ஆலயத்தின் அருகிலுள்ள தெப்பக்குளம் கட்டடக்
கலைத்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இக்குளம் கட்டி முதலிகளின் பெருமைக்கு ஒரு சான்றாக
விளங்குகின்றது.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கட்டி முதலிகள்
நமக்கு விட்டுச் சென்றுள்ள மரபுரிமைச் செல்வமாகும். தாரமங்கலம்,
பேரூர், தாடிக்கொம்பு ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில்
காணப்படும் சிற்பங்கள் ஒரே இலக்கணத்துடன் மிகவும்
கவனத்துடனும் கலை ஆர்வத்துடனும் உருவாக்கப்பெற்றவை
என்று கூறுவர்.