பக்கம் எண் :

20தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சுதந்தரத்திற்குப்பின் தமிழ்நாட்டு வரலாறு

நமது இந்திய நாடு சுதந்தரமடைந்தபொழுது (1947, ஆகஸ்ட் 15)
சென்னை மாநிலத்தில் O.P. இராமசாமி ரெட்டியார் தலைமையில்
காங்கிரஸ் அமைச்சரவை அமைத்திருந்தது. எட்வர்டு நைய்
என்பவர் சென்னை மாநில ஆளுநராக இருந்தார். பின்
பவநகர் மகாராஜா
ஆளுநரானார். O.P. இராமசாமி
ரெட்டியாருக்குப் பின் S. குமாரசாமி ராஜா சென்னை மாநில
முதலமைச்சராகப் பணியாற்றினார்.

சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் இந்திய
சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தபொழுது
புதுக்கோட்டை
இந்திய யூனியனுடன் இணைந்து சென்னை
மாநிலத்தின் ஒரு பகுதியாயிற்று (1948). 1950 ஜனவரி 26இல்
இந்தியா ஒரு குடியரசானது. இந்திய அரசியல் சட்டப்படி சென்னை
மாநிலம் இந்திய யூனியனில் ஆளுநரின் ‘கீழுள்ள A’ பிரிவிலுள்ள
9 மாநிலங்களில் ஒரு மாநிலம் ஆகியது. குடியரசு இந்தியாவின்
முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடந்தது. சென்னை மாநிலச்
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சில சுயேட்சை
அங்கத்தினர்களுடன் சேர்ந்து அமைச்சரவை அமைத்தது.
இராஜாஜி
இதன் முதலமைச்சரானார்.

மத்திய அரசிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று அமைச்சரவை
அமைத்தது. ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராகத்
தொடர்ந்து பணியாற்றலானார். இராஜேந்திர பிரசாத் இந்தியாவின்
முதல் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.

1953ஆம் வருடம் சென்னை மாநிலத்திலிருந்து சில
பகுதிகள் பிரிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
இராஜாஜி தமது பதவியை இராஜினாமாச் செய்யவே (1954)
கர்மவீரர் காமராஜர் சென்னை மாநில முதலமைச்சரானார்.
இந்திய அரசாங்கத்தின் மாநிலச் சீரமைப்பின்பொழுது (1956)
திருவிதாங்கூர்ப் பகுதியிலிருந்த தமிழ் பேசும் மக்களைக்