கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் சென்னை மாநிலத்துடன்
இணைக்கப்பட்டது.
1957 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் பெரும்பான்மை
வெற்றி பெற்றுச் சென்னை மாநிலத்தில் மீண்டும் காமராஜர்
தலைமையில் அமைச்சரவை அமைத்தது. மத்திய அரசில்
ஜவஹர்லால் நேரு தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றினார்.
1962 பொதுத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று
சென்னை மாநிலத்தின் அமைச்சரவை அமைத்தது.
காமராஜர்
தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்றார். மத்திய அரசில்
ஜவஹர்லால் நேரு தொடர்ந்து பிரதமராகப் பதவியேற்றார்.
1963இல் காமராசர் தமது பதவியை இராஜினாமச் செய்துவிட்டு
அகில இந்தியக் காங்கிரசின் தலைவரானார். காமராசருக்குப்பின்
M. பக்தவத்சலம் சென்னை மாநில முதலமைச்சர் ஆனார்.
1965இல் இந்தி மொழியை எதிர்த்துத் தமிழகத்தில் மாணவர்கள்
பெரும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் சிலர்
உயிரிழந்தனர்.
1967ஆம் வருடம் நடந்த பொதுத் தேர்தல்
தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பத்தை
உண்டு பண்ணியது. சுதந்தரத்திற்காகப் பாடுபட்ட காங்கிரஸ்
நாம் சுதந்தரம் அடைந்ததிலிருந்து சுமார் 20 ஆண்டுகள்
(1947-1967) சென்னை மாநிலத்தை ஆட்சி புரிந்தது. உணவு
உற்பத்திப் பெருக்கு, தொழில் அபிவிருத்தி, குடிநீர்த்திட்டம்,
பாசனத் திட்டம், நீர்-அனல் மின்சக்திப் பெருக்கு, நாடு முழுவதும்
மின்ஒளி வழங்கும் திட்டம், கல்விப்பெருக்கு, கட்டணமற்ற கல்வி,
மதிய உணவுத் திட்டம் முதலிய பல திட்டங்கள் காங்கிரஸ்
ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், காங்கிரஸ் அரசின்
இந்தி மொழிக் கொள்கையும் இதர சில காரணங்களும் இதன்
வீழ்ச்சிக்கு காரணமாயின. 1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ்
கட்சியினர் ஆட்சி சென்னை மாநிலத்தில் முடிவுற்றது. 1949இல்
தோற்றுவிக்கப்பட்டு படிப்படியாக வளர்ச்சியடைந்த
திராவிட
முன்னேற்றக் கழகம் 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று
அறிஞர் அண்ணா தலைமையில்
|