பக்கம் எண் :

22தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சென்னை மாநிலத்தில் அமைச்சரவை அமைத்தது. முதலமைச்சர்
அறிஞர் அண்ணா முயற்சியின் விளைவாக 1968ஆம் ஆண்டு ஒரு
விசேட சட்டம் இயற்றப்பட்டுச் சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’
என்ற பெயரைப் பெற்றது. தமிழ்மக்களுக்கு நீண்ட நாள் சேவை
செய்ய முடியாமல் அறிஞர் அண்ணா 1969இல் காலமானார்.
அவருக்குப்பின் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு மாநில
முதலமைச்சர் ஆனார். 1971 பொதுத்தேர்தலிலும் திராவிட
முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை வெற்றி பெற்று கலைஞர்
கருணாநிதி தலைமையில் தமிழ்நாட்டில் அமைச்சரவை
அமைத்தது. 1975ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நெருக்கடி
நிலைமை
பிரகடனம் செய்யப்பட்டுப் பிரதமர் இந்திரா காந்தியின்
20 அம்ச பொருளாதாரத் திட்டம் நாடெங்கும் செயல்படுத்தப்பட்டது.
1976, ஜனவரியில் தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தையும்
அமைச்சரவையையும் மத்திய அரசு கலைத்தது. 1976, ஜனவரி
முதல் 1977 ஜுன்வரை தமிழ்நாட்டில் இந்தியக் குடியரசுத்
தலைவரின் ஆட்சி ஏற்பட்டது. 1977இல் (மார்ச்) நடைபெற்ற
பாராளுமன்றத் தேர்தலில் ஜனதாக்கட்சி வெற்றிபெற்று பிரதமர்
மொரார்ஜி தேசாய்
தலைமையில் அமைச்சரவை அமைத்தது.
உடன் நெருக்கடி நிலை நீக்கப்பட்டது. 1977, ஜுனில் நடந்த
சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் வரலாற்றில் மற்றுமொரு
திருப்பத்தை உண்டு பண்ணியது.
1967 முதல் 1976 வரை
பதவியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு 1977
தேர்தலில் வீழ்ச்சியுற்றது. 1972இல் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகமாகத் தோற்றுவிக்கப்பட்டு விரைவில்
வளர்ச்சியடைந்த அகில இந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம்
1977 தேர்தலில் பெரும்பான்மை வெற்றி
பெற்று ‘மக்கள் திலகம்’ M. G. இராமச்சந்திரன் தலைமையில்
தமிழ்நாட்டில் அமைச்சரவை அமைத்தது. 1980 ஜனவரியில்
நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஜனதாக் கட்சி
வீழ்ச்சியுற்று, காங்கிரஸ் (இந்திரா) வெற்றி பெற்று, பிரதமர்
இந்திரா காந்தி தலைமையில் அமைச்சரவை அமைத்தது. 1980
பிப்ரவரியில் தமிழ்நாடு மாநிலச் சட்ட