பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்23

மன்றமும் இதர சில மாநிலச் சட்டமன்றங்களும் மத்திய
அரசால் கலைக்கப்பட்டன. 1980 பிப்ரவரி முதல் 1980 மே
வரை தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டது.
1980 மே இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில்
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும்
பெரும்பான்மை வெற்றி பெற்று ‘மக்கள் திலகம்’
M.G. இராமச்சந்திரன் தலைமையில் மீண்டும் தமிழ்நாட்டில்
அமைச்சரவை அமைத்துள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய
ஆளுநர் குரானா ஆவார். ஜெயில்சிங் இந்தியக் குடியரசின்
தலைவராகவும், திருமதி. இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகவும்,
தற்போழுது பதவியில் உள்ளனர்.

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்
பண்பாட்டுச் சின்னங்களும்

நமது இந்திய நாட்டின் ஒரு முக்கிய மாநிலமாக விளங்கும்
தமிழ்நாட்டின் வரலாற்றுச் சுருக்கம்: (பண்டைக்காலம் முதல்
1981ஆம் ஆண்டுவரை தரப்பட்டது.) 1981ஆம் ஆண்டில்
இந்தியாவின் மக்கள்தொகை 683,810,051(683.8மில்லியன்)
என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் மக்கள்
தொகை, 48,297,456 (48.29 மில்லியன்) ஆகும். இன்றைய தமிழ்நாடு
சுமார் 16,500 கிராமங்களையும்,376 ஊராட்சி ஒன்றியங்களையும்,
98 நகராட்சிகளையும் 3 மாநகராட்சிகளையும் கொண்டுள்ளது.
முன் கூறப்பட்டுள்ள தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ் நாட்டிலுள்ள
ஊர்களை எந்த அளவில் பாதித்துள்ளது என்றும், இவ்வரலாற்றின்
அடிப்படையில் எழுந்துள்ள பண்பாட்டுச் சின்னங்களைப்பற்றியும்
39 தலைப்புகளில் கூறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகரான
சென்னை முதல் தலைப்பில் இடம் பெறுகிறது.