பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்205

மருதமலை

கோயம்புத்தூர் நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில்
மருதமலை
உள்ளது. இங்கு முருகனின் புகழ்மிக்க ஆலயம்
உள்ளது. இங்குள்ள முருகன், மருதாசல மூர்த்தி எனப்படுகிறார்.
இக்கோவிலில் கொங்கு நாட்டை ஆண்ட அரச வம்சத்தாரின்
கல்வெட்டுகள் உள்ளன.

கிறித்தவ ஆலயங்கள்

கோயம்புத்தூர் நகரின் மத்தியிலுள்ள புனித மிக்கேல்
பேராலயம்
கத்தோலிக்க சமயத்தினரின் புகழ்பெற்ற
ஆலயமாகும். இவ்வாலயத்தின் பங்குச்சேவை கி.பி. 1850இல்
தொடங்கிற்று. கி.பி. 1867இல் இவ்வாலயத்திற்கு அழகிய கட்டடம்
எழுப்பப்பட்டது. இது கட்டடக்கலைச் சிறப்புமிக்கது. கோயம்புத்தூர்
நகரின் எழில்மிக்க பண்பாட்டுச் சின்னமாக இவ்வாலயம்
விளங்குகிறது.

டாக்டர் நஞ்சப்பா சாலையில் கிறிஸ்து அரசர் ஆலயம்
உள்ளது. இது கோயம்புத்தூர் நகரிலுள்ள மற்றொரு சிறந்த
கத்தோலிக்க கிறித்துவ ஆலயம் ஆகும். இது கி.பி. 1935இல்
தோற்றுவிக்கப்பட்டது. புலிய குளத்திலுள்ள புனித
அந்தோணியார் ஆலயம், காந்திபுரத்திலுள்ள பாத்திமா மாதா
ஆலயம், இரத்தினசபாபதிபுரத்திலுள்ள புனித அருளானந்தர்
ஆலயம், சவேரியார்பாளையத்திலுள்ள பிரான்சிஸ் சவேரியார்
ஆலயம் ஆகியவை இந்நகர்ப் பகுதியிலுள்ள இதர முக்கியக்
கத்தோலிக்க ஆலயங்களாகும்.

கோயம்புத்தூர் நகரில் தென்னிந்தியத் திருச்சபையினருக்கான
(C.S.I) ஆலயங்களில் சிறப்புமிக்கது இம்மானுவேல் ஆலயம்
ஆகும். இவ்வாலயம் கி.பி. 1831இல் கட்டப்பட்டது. 1880இல்
இதன் கட்டடப்பகுதி விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாலயத்தின்
சுற்றுச் சுவருக்குள் பல ஆங்கிலேயர்கள் அடக்கம் செய்யப்பட்டு
எழுப்பப்பட்ட கல்லறைகள் உள்ளன. பந்தய சாலையில் சகல
ஆத்மாக்கள் ஆலயம்
(
C.S.I) உள்ளது. கி.பி. 1872இல்
இவ்வாலயம் கட்டப்பட்டது. பழமை குறையாது. ஆனால்,
பொலிவான தோற்றத்துடன் இவ்வாலயம்