காணப்படுகிறது. இங்கு ஆங்கில மொழியில் ஆராதனை
நடைபெறுகிறது. இருப்புப்பாதைச் சந்திப்பு அருகில் கிறிஸ்துநாதர்
ஆலயம் உள்ளது இதுவும் தென்னிந்திய
திருச்சபையினருக்குரியதாகும். இவ்வாலயம் 1910இல்
கட்டப்பட்டது.
பள்ளிவாசல்கள்
ஒப்பணக்கார வீதியில் இஸ்லாமிய மக்களின் பெரிய பள்ளி
வாசல் உள்ளது. இது அத்தார் ஜமாத் பள்ளிவாசல்
எனப்படுகிறது. கோட்டைமேடு பகுதியில் இரு பள்ளிவாசல்கள்
உள்ளன. நகரின் மற்ற பகுதிகளில் இதர சில பள்ளிவாசல்கள்
உள்ளன. ஜமேஷா அவுலியா தர்கா, ‘ஜங்கல்’பீர் அவுலியா
தர்கா ஆகிய இரண்டும் இஸ்லாமிய மக்களுக்குப்
புனிதமானவையாக உள்ளன.
சமணர் ஆலயம்
கோயம்புத்தூர் நகரில், இரத்தின சபாபதிபுரத்தில் (11/81
பொன்னுரங்கம் சாலை) ஓர் அழகிய சமண ஆலயம் உள்ளது.
கோயம்புத்தூரிலுள்ள சுவேதாம்பர சமணர் சங்கத்தினரால்
இது 1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. (22-5-1981 அன்று
இவ்வாலயம் வழிபாட்டிற்குத் திறக்கப்பட்டது.) சமண சமயத்தின்
23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்காக இவ்வாலயம்
எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு
சிறிய கட்டடத்தில் இவ்வாலயம் தோற்றுவிக்கப் பட்டது.
இங்கு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள பார்சுவநாதர், மகாவீரர்,
சாந்தி நாதர், சுமதி நாதர், ஆதிநாதர் முதலிய சமண
தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் ஜெய்ப்பூரிலிருந்து
(இராஜஸ்தான்) கொண்டுவரப்பட்டவையாகும். இவை பளிங்கினால்
ஆனவை. கட்டடத்திற்கு வேண்டிய இதர பளிங்குக் கற்களும்
இராஜஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஆலயத்தில்
நிறுவப்பட்டுள்ள தூண்களுக்கான கற்கள் குஜராத்
மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அரத்தினால்
அறுக்கக்கூடிய அளவிற்கு மெதுவாக உள்ள கற்கள்
(Soft Stone) குஜராத்தில் போர்பந்தரிலிருந்து இங்குக்
கொண்டுவரப்
|