பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்207

பட்டுள்ளன. ஆலயத்தின் மாடிப்பகுதியில் முனீஸ்வரச் சுவாமி
வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளார். இவ்வாலயத்தின் கட்டட
அமைப்பு சமணர், கட்டட, சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாக உள்ளது. கட்டட வேலை இன்னும் ஒன்று
அல்லது இரண்டு ஆண்டுகளில் முற்றுப்பெறும் என்று தெரிகிறது.
இவ்வாலயம் முற்றுப் பெற்றால், தமிழ்நாட்டில், சென்னை
திருவல்லிக்கேணியிலுள்ள சமணர் ஆலயத்தைவிடச்
சிறப்புமிக்கதாய் விளங்கும் என்று கருதப்படுகிறது.

போளுவாம்பட்டி தொல்பொருள் ஆய்வு

போளுவாம்பட்டி என்ற கிராமம் கோயம்புத்தூர் நகரிலிருந்து
22கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமத்தினருகிலுள்ள
‘கோடடைக் காடு’ என்ற இடத்தில் 1980ஆம் ஆண்டு
தொல்பொருள் ஆய்வுகள் நடந்தன. அழகிய
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ள பல சுடுமண் காதணிகள்,
மண்பாத்திரங்கள், சங்கு, வளையல்கள், பலவகை அகல் விளக்குகள்,
மனித எலும்புக்கூடுகள் முதலியவை இங்கு அகழ்ந்து
காணப்பட்டுள்ளன. கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குரியதாகக்
கருதப்படும் சுடுமண் அரச இலட்சினை வரலாற்றுச் சிறப்பு
மிக்க தொல்பொருளாக உள்ளது. பண்டைக்காலம் முதல்
கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதி ஒரு சிறந்த
வாணிபத்தலமாக விளங்கியிருக்கக்கூடும் என்று
கருதப்படுகிறது. போளுவாம்பட்டியில் அகழ்ந்து கண்ட சுடுமண்
பொருள்கள் முதலியவை கோயம்புத்தூரிலுள்ள (ராம் நகர்,
ஐயப்பா பூசை மண்டபம் அருகிலுள்ள) தமிழ்நாட்டு அரசின்
தொல்பொருள் துறை அலுவலகத்தில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.

கருமத்தாம்பட்டி

கோயம்புத்தூர் நகரிலிருந்து 26 கி.மீ. தொலைவில்
கருமத்தாம்பட்டி
என்ற கிராமம் உள்ளது. இது ஒரு பழமைமிக்க
ரோமன் கத்தோலிக்க மையம் ஆகும். கி.பி. 17ஆம் நூற்றாண்டில்
இயேசு சங்கப் பாதிரியார்கள் இவ்வூரை ஒரு முக்கிய
மையமாகக்கொண்டு சமயப் பணியாற்றினர். இவர்களுள்
குறிப்பிடத்தக்க ஒருவர் இராபர்ட்-டி-நொபிலி (1577-1656)