பக்கம் எண் :

208தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஆவார். இயேசு சங்கப் பாதிரியாரான ஜான்-டி-பிரிட்டோவும்
இவ்வூருக்கு வருகை தந்துள்ளார்.

கிறித்தவர்களின் வழிபாட்டிற்காக கி.பி. 1660இல் இவ்வூரில்
ஒரு சிறு கிறித்தவ ஆலயம் எழுப்பப்பட்டது. கி.பி. 1759 வரை
இயேசு சங்கப் பாதிரியார்கள் இவ்வூரில் தங்கி கிறித்தவ
சமயத்தைப் பரப்பினர். பின் போர்ச்சுகீசிய அரசின்
உத்தரவினால் இங்கிருந்த கிறித்தவப் பாதிரியார்கள்
அகற்றப்பட்டனர். திப்புசுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும்
இடையே நடைபெற்ற மைசூர்ப் போர்களின்போது இங்கிருந்த
கிறித்தவ ஆலயம் அழிந்தது.

பிரெஞ்சுக் கழகத்தைச் சேர்ந்த தந்தை துபாய்
(Rev.Fr.Dubois) (கி.பி. 1803இல் கருமாத்தம்பட்டிக்கு வருகை
தந்தார். ஞானப்பிரகாசம் என்ற இந்தியக் குருவின் உதவியுடன்
முன்பிருந்த ஆலயப்பகுதியில் புதிதாக ஊர் ஆலயத்தைக்
கட்டினார் (புனித ஜெபமாலை மாதா ஆலயம்). பிரெஞ்சு
சமயக்குருமார்களின் பணியினால் இவ்வூர் மீண்டும் ஒரு
கத்தோலிக்க மையமாயிற்று. 1846இல் கோயம்புத்தூர் மண்டலப்
பேராயரது தலைமையிடமாக இவ்வூர் ஆயிற்று. 1850ஆம்
ஆண்டு கோயம்புத்தூர் நகரம் மண்டலப் பேராயரின்
தலைமையிடமாக மாற்றப்பட்ட பின் இவ்வூரின் முக்கியத்துவம்
குறைந்தது.

காரமடை

கோயம்புத்தூர் நகரிலிருந்து 28 கி.மீ. தொலைவில்
காரமடை என்ற ஊர் உள்ளது. இங்கு ரெங்கனாத சுவாமி
கோவில்
உள்ளது. இது புகழ்பெற்ற வைணவத்தலம் ஆகும்.
இக்கோவிலின் சில பகுதிகள் மதுரைநாயக்க மன்னர் திருமலையால்
(1623-1659) கட்டப்பட்டன என்று கூறப்படுகிறது. மகா விஷ்ணுவின்
பத்து அவதாரங்கள் இக்கோவிலின் தூண்களில் அழகாக
வடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கோபால கிருஷ்ணன்,
கோதண்டராமன் ஆகிய திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை.

ரெங்கநாத சுவாமி கோவிலுக்குத் தெற்கில்
நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
உள்ளது. இங்கு சுமார் 2
மீட்டர் உயர