முள்ள யானையின் உருவங்கள் கருவறையின் வெளிச்சுவர்களில்
அழகாக வடிக்கப்பட்டுள்ளன.
காரமடையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் குருந்தமலை
உள்ளது. இங்குக் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
மதுரை திருமலை மன்னனால் இக்கோவில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
அவினாசி
கோயம்புத்தூரிலிருந்து 41 கி.மீ. தொலைவில் அவினாசி
உள்ளது. கொங்கு நாட்டின் ஏழு முக்கியச் சிவத் தலங்களில்
இது ஒன்றாகும். அவினாசீஸ்வரர் என்ற சிவனது கோவில்
இங்கு உள்ளது. சைவ சமயக்குரவர்களில் தேவாரம் பாடிய
மூவராலும், அருணகிரிநாதராலும் பாடல்பெற்ற தலமாகும்.
‘தென்னாட்டின் காசி’ எனவும் இத்தலம் அழைக்கப்படும்.
கி.பி. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இவ்வூர் மைசூர் மன்னர்
கிருஷ்ணதேவ உடையார், கி.பி 1756இல் அவினாசீஸ்வரர்
கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இங்குள்ள ஏரிக்கரையில்
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின்
சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும்.
முதலைகள் வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப
அமைப்பு இங்கு உள்ளது. முதலை ஒரு குழந்தையை
விழுங்கியதாகவும், அக்குழந்தையை வேண்டிப் பாடிய
சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடலினால் குழந்தை முதலை
வாயிலிருந்து வெளிவந்தது என்றும் ஒரு கதை கூறப்படுகிறது.
இக்கதையை விளக்கும் சிற்பங்கள் கொங்கு நாட்டுக் கோவில்களில்
மட்டும் உள்ளன எனப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய
கோவில் தேர்களில்
அவினாசிக் கோவில் தேரும் ஒன்றாகும்.
திருப்பூர்
அவினாசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் திருப்பூர்
உள்ளது. உள்ளாடைகள் உற்பத்திக்குப் பெயர் பெற்ற இந்நகரம்
|