இந்தியச் சுதந்தரப் போராட்டத்தில் ஒரு முக்கிய இடத்தைப்
பெற்றுள்ளது.
“கொடி காத்தக் குமரன்” என்ற இந்தியச் சுதந்தரப்
போராட்டத் தியாகி பிறந்த இடம் திருப்பூர் ஆகும். 1932ஆம்
வருடம் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் இந்தியா வெங்கும்
ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. அதுசமயம் திருப்பூரில்
காங்கிரஸ் தொண்டர்கள் தடை உத்தரவை மீறி ஊர்வலம் சென்றனர்.
அந்த ஊர்வலத்தில் வ. குமாரசாமி (1904 - 1932) என்ற
நெசவாளி வீரத்துடன் தேசக் கொடி பிடித்துச் சென்றார். ஆனால்,
அவர் காவல் துறையினரின் தடியடியால் தாக்குண்டு கையில்
பிடித்திருந்த கொடியுடன் உயிர் நீத்தார் (11-1-1932). இந்தக்
குமாரசாமியே ‘கொடி காத்த குமரன்’ என்று புகழ்பெற்றுத்
திருப்பூருக்குப் பெருமையினைத் தேடித் தந்தார். விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி குமரனின் நினைவுச்சின்னம்
ஒன்று விடுதலைப் போராட்ட நூற்றாண்டு விழாவின்பொழுது
(1857-1957) திருப்பூர் இரயில் நிலையம் அருகே நிறுவப்பட்டது.
கோயம்புத்தூரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள
பொள்ளாச்சி தமிழ்நாட்டின் ஒரு முக்கிய வாணிபத் தலம்
ஆகும். பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவில்
ஆனமலை வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது.
உதகமண்டலம்
கோயம்புத்தூரிலிருந்து 89 கி.மீ. தொலைவில்
உதகமண்டலம் (ஒத்தக்கல் மந்து) உள்ளது. இந்நகர் நீலகிரி
மாவட்டத்தின் தலைமை இடமாகும். கடல் மட்டத்திலிருந்து
2,286 மீட்டர் உயரத்தில் நீலகிரிமலையில் இந்நகர் அமைந்துள்ளது.
இது ஒரு சிறந்த மலைவாசஸ்தலம் ஆகும். “மலைவாச ஸ்தலங்களின்
ராணி” என இது அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில் கோடைகாலத்தில் சென்னை ஆளுநர்களின்
தலைமையிடமாக உதகமண்டலம் விளங்கிற்று. தேயிலை, காப்பி,
யூகலிப்ட்ஸ் எண்ணெய்
|