ஆகியவற்றின் உற்பத்திக்கு இப்பகுதி சிறந்து விளங்குகிறது.
இங்குள்ள ‘தாவரத் தோட்டத்தில்’ (Botanical gardens)
காணப்படும் மரம், செடிவகைகள் ஓர் அரிய காட்சியாகும்.
சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்வடையும்படியான பல இடங்கள்
இங்கு உள்ளன. இங்குள்ள அழகிய ஏரி 1825ஆம் ஆண்டில்
வெட்டப்பட்டது. இதை அமைத்தப் பெருமை ஜான்
சுல்லிவான்
என்ற கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சேரும்.
உதகமண்டலத்தில் பல அழகிய கிறித்தவ ஆலயங்களும்
சிறந்த கல்வி நிலையங்களும் உள்ளன. இந்நகரிலுள்ள
கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் குறிப்பிடத்தக்கவை புனித
நெஞ்ச பேராலயம், புனித மரியன்னை ஆலயம், புனித தெரசா
ஆலயம், லூர்து மாதா ஆலயம் ஆகியவையாகும்.
புனித ஸ்டீபன் ஆலயம்
தென்னிந்தியத்
திருச்சபையினருக்குரியதாகும் (C.S.I) இவ்வாலயம்
கி.பி. 1830இல் கட்டப்பட்டது. திப்புசுல்தானின் தலைநகரான
ஸ்ரீரெங்க பட்டணத்திலிருந்த திப்புவின் லால் பாக் மாளிகையை
இடித்துக் கொண்டுவரப்பட்ட தேக்குமரங்கள் இவ்வாலயத்தைக்
கட்டுவதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின் கவர்னர் ஜெனரல்கள் பலர், ஆங்கில அரசப்
பிரதிநிதிகள் பலர், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் அட்லி
ஆகியோர் இவ்வாலயத்தின் வழிபாட்டிற்கு வந்துள்ளனர்.
உதகமண்டலம் அருகில்
போட்டோ பிலிம்
தொழிற்சாலை ( H.P.F) உள்ளது. பிரெஞ்சு அரசின் உதவியுடன்
இவ்வாலை நிறுவப்பட்டுள்ளது. உதகமண்டலத்திலிருந்து
19 கி.மீ. தொலைவிலுள்ள கூனூரும், 29 கி.மீ. தொலைவிலுள்ள
கோத்தகிரியும், மலை வாசஸ்தலங்கள் ஆகும். கூனூரில்
பாஸ்டியர் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. கூனூரிலிருந்து
5 கி.மீ. தொலைவில் அரவங்காட்டில் ‘துப்பாக்கி
வெடிமருந்துத்
தொழிற்சாலை’ உள்ளது.
உதகமண்டலத்திலிருந்து 20 கி.மீ.
தொலைவில்
உருவாக்கப்பட்டுள்ள பைகாரா நீர் மின்சக்தி
திட்டமும்,
உதகமண்டலத்தி
|