பிற்பகுதியில் இம்மண்டபத்தின் ஒரு பகுதிக் கட்டடப் பகுதி
எழுப்பும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுச் சில ஆண்டுகளில்
நிறைவு பெற்று இன்றைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.நவரங்க மண்டபத்தின் நடுவிலுள்ள ஒரு தூணில்
பத்திரகாளியின் திருவுருவம் உள்ளது. இத்தெய்வம் இங்கு
முக்கியமாக வழிபடப்படுகிறது. இம்மண்டபத்தில் 40 நெடிய
தூண்கள் உள்ளன. முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள
இம்மண்டபத் தூண்களில் தண்டபாணி சுவாமி, சுப்ரமணியர்,
நடராசர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகிய
தெய்வங்களின் திருவுருவங்களும், இரண்டு துவாரபாலர்களின்
சிற்பங்களும் உள்ளன. சில தூண்களின் உச்சிப்பகுதியில் வாயில்
கல் உருண்டைகளுடன் சிங்கத்தின் உருவங்கள் விநோதமாகக்
காட்சியளிக்கின்றன. நவரங்க மண்டபச் சிற்பங்கள்
வேலைப்
பாடுமிக்கவை. இவை இம்மண்டபத்தை ஒரு கலைக்கூடமாகக்
காட்சியளிக்கச் செய்கின்றன.கி.பி. 17ஆம் நூற்றாண்டு முதல்
ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழா இம்மண்டபத்தில்
கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி. 1634இல் பழனி மலைக்
கோவிலுக்கு வருகை தந்த திருமலையின் அமைச்சர் இராமப்பய்யன்
நவரங்க மண்டபத்தின் விஜயதசமி விழாவில்
கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பழனி நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில்
பெரியாவுடையார்
கோவில் உள்ளது. இங்குள்ள சிவன் பிரகதீஸ்வரர் அல்லது
பெரியாவுடையார் எனப்படுகிறார். இக்கோவில் பாண்டிய,
கொங்குச் சோழ மன்னர்களால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு
முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழனி நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில்
சண்முக நதி
என்ற புனிதமாகக் கருதப்படும் நதி ஓடுகிறது. பழனி நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில்
பால
சமுத்திரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு அகோபிலம்
வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இது
கி.பி. 17ஆம் நூற்றாண்டில்
|