கொடைக்கானல் பழனி நகரிலிருந்து 64 கி.மீ. தொலைவில் கொடைக்கானல்
உள்ளது. (மதுரையிலிருந்து 120 கி.மீ.) பழனியிலிருந்து
கொடைக்கானலுக்கு 1977ஆம் ஆண்டு புதிய மலைப்பாதை
போடப்பட்டுப் பேருந்துப் போக்குவரவு ஆரம்பமானது. கொடைக்கானல் ஒரு மலைவாச ஸ்தலம் ஆகும். மேற்குத்
தொடர்ச்சி மலைப்பகுதியில் பழனிக் குன்றுகள்மீது இது
அமைந்துள்ளது. 2,133 மீட்டர் உயரத்தில் இவ்விடம்
அமைந்துள்ளது. ஐரோப்பியரின் வருகையினாலும், செண்பகனூர்
புனித நெஞ்சக் கல்லூரியின் தோற்றத்தினாலும் (கி.பி. 1895)
இவ்விடம் பெரிதும் சிறப்படைந்தது எனலாம். மதுரை அமெரிக்கக்
கிறித்தவ சபையினரால் 1845ஆம் ஆண்டில் கொடைக்கானலில்
முதன் முதலாகக் கட்டடங்கள் எழுந்தன. 1860முதல் 1867வரை
மதுரை மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றிய ஹென்றி
லெவிஞ் கொடைக்கானலின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாவார்.
இவரது முயற்சியினால் இங்கு 1863இல் ஏரி வெட்டப்பட்டது.
இந்தியாவிற்குக் கிறித்தவ சமயப் பணிக்காக வந்த
டாக்டர்
கால்டுவெல் (1815-1891) இங்கு சிறிது காலம் வாழ்ந்து
காலமானார். சுற்றுலாப் பயணிகள் பார்த்து மனமகிழ்வடையும்படி
கொடைக்கானலில் பல இடங்கள் உள்ளன. பௌதிகத்துறை
நோக்குக் கூடம் (Solar Physics
Observatory)
கொடைக்கானலில் உள்ளது. இங்குக் குறிஞ்சி ஆண்டவர்
கோவில் உள்ளது. ‘குறிஞ்சி’ என்ற, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
மலரும் அரிய மலரை இம்மலைப்பகுதியில் மிகுதியாகக்
காணலாம். (1982ஆம் ஆண்டில் இம்மலர் மலர்ந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது). அமெரிக்கக் கிறித்தவ சபையினர்
இங்கு 1856ல் ஓர் ஆலயத்தை எழுப்பினர். 1863இல்
கத்தோலிக்கத் திருச்சபையினரின் ஆலயம் ஒன்று எழுந்தது.
புனித நெஞ்ச ஆலயம், புனித சவேரியார் ஆலயம், புனித மேரி
ஆலயம், புனித ஜோசப் ஆலயம், புனித பீட்டர் ஆலயம்,
தென்னிந்தியத் திருச்சபை ஆலயம், லூதர்
|