போர்ச்சுகீசியர்கள் கி.பி. 1510இல் கோவாவைக் கைப்பற்றி
இந்தியாவுடன் சிறப்பாக வாணிபம் நடத்தினர். சென்னையில்
வந்து குடியேறிய முதல் ஐரோப்பியர்கள் போர்ச்சுகீசியர்கள்
ஆவர். இவர்கள் கி.பி. 1522இல் சாந்தோமிலுள்ள
புனித
தாமஸ் ஆலயத்திற்கு வருகை தந்தனர். அப்பொழுது
சென்னைப்பகுதி விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர்
(1509-1529) அரசின்கீழ் இருந்தது. போர்ச்சுகீசியர்கள் விஜயநகர
மன்னர்களுடன் நட்புறவு கொண்டிருந்தனர். இவர்கள் சாந்தோமை
ஒரு முக்கிய வாணிபத் தளமாகவும், கத்தோலிக்கக் கிறித்தவ
சமயத்தின் பெருமைக்குரிய ஒரு மையமாகவும் ஆக்கினர்
(1552). சாந்தோமில் குடியேறிய போர்ச்சுகீசியர்கள், ஒரு
குறிப்பிட்ட பணத்தை விஜயநகர அரசருக்குக் கப்பமாகச்
செலுத்தினர். தலைக்கோட்டைப் போருக்குப்பின் (1565)
சென்னைப் பகுதிகள் சந்திரகிரியில் (சித்தூர் மாவட்டம் -
ஆந்திர மாநிலம்) ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னரின்
ஆட்சியின்கீழ் வந்தன.
சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர்
மூன்றாம்
வெங்கடனிடம் (1630-1642) வேங்கடப்பர், அவரது சகோதரர்
அய்யப்பர் ஆகிய இரு நாயக்கத் தலைவர்களும் (தாமர்ல
சகோதரர்கள்) செல்வாக்குப் பெற்று விளங்கினர். வேங்கடப்பரின்
தலைமையிடம் வந்தவாசியில் இருந்தது. அய்யப்பர்
பூவிரிந்தமல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி
புரிந்தார். புலிக்கட்டிலிருந்து (புல்லிநாடு) சாந்தோம்வரை
உள்ள கடற்கரைப்பகுதி இவர் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்தது.
மசூலிப்பட்டினத்தில் தங்களது வாணிபச் செழிப்பிற்கு
வாய்ப்பு இல்லாததைக் கண்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி
அதிகாரிகள் தென்னிந்தியக் கடற்கறையில் தங்கள் வாணிபத்திற்கு
ஏற்ற ஒரு இடத்தைப் பெற முற்பட்டனர். அப்பொழுது வேங்கடப்பர்
ஆங்கிலேயருக்கு வியாபாரச் சலுகைகள் அளிப்பதில் ஆர்வம்
காட்டினார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த
பிரான்சிஸ்டே என்பவர் மசூலிப்பட்டினத்திலிருந்த மேலதிகாரியின்
அனுமதி பெற்று வேங்கடப்பரிடம் பேச்சு வார்த்தைகள்
|