பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்27

சென்னையில் இஸ்லாமியர் ஆதிக்கம்

விஜய நகர வம்சத்தினரின் கடைசி அரசர் மூன்றாம்
ஸ்ரீரங்கன்
ஆவார். இவரது ஆட்சிக் காலத்தில் (1642-1672)
மீர்ஜம்லா தலைமையிலான கோல்கொண்டா படைகள் கர்நாடகத்தின்
சில பகுதிகளில் ஆதிக்கம் பெற்றன. 1646இல் மீர்ஜம்லா
சாந்தோமைக் கைப்பற்றினார். இவர் பூவிரிந்த மல்லியையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. கோல்கொண்டா படையெடுப்பினால்,
சென்னை இஸ்லாமியரின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. கோல்கொண்டா
அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி. 17ஆம் நூற்றாண்டின்
இறுதியில் சென்னைப் பகுதிகள் மொகலாய அரசுக்குட்பட்ட
கர்நாடக நவாபுகளின் ஆட்சியின்கீழ் வந்தன.

கர்நாடகப் போர்களின் பொழுது சென்னை

அன்வாருதீன் கர்நாடக நவாபாக இருந்தபொழுது
(கி.பி. 1743-49) கர்நாடகத்தில், ஆங்கிலேயர்களுக்கும்
பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் ‘கர்நாடகப் போர்கள்’ நடந்தன.
முதல் கர்நாடகப் போரின் பொழுது சென்னை பிரெஞ்சுக்காரர்களால்
பிடிக்கப்பட்டது. (கி.பி. 1746) லா போர்டனே என்ற பிரெஞ்சு
ஆளுநர் சென்னையைப் பிடிக்க உதவினார். சென்னை
ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகும்.
இதனால் சென்னையைப் பிரெஞ்சுக்காரர்களின் முற்றுகையிலிருந்து
விடுவிக்க அன்வாருதீன் முன் வந்தார். ஆனால், அவரது படைகள்
சாந்தோம் அருகில் (அடையாறு போரில்) பிரெஞ்சுக்காரர்களால்
தோற்கடிக்கப் பட்டன (1746). கி.பி. 1746முதல் 1749வரை சென்னை
பிரெஞ்சுக்காரர்களின் கையில் இருந்தது. பிரெஞ்சுக்காரர்களின்
இவ்வலிமைக்குக் காரணமாயிருந்தவர் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு
ஆளுநர் டியூப்ளே ஆவார். கி.பி. 1749இல் ஆங்கிலேயருக்கும்
பிரெஞ்சுக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி
சென்னை ஆங்கிலேயருக்கு மீண்டும் கிடைத்தது. இரண்டாவது
கர்நாடகப் போரின் பொழுது