பக்கம் எண் :

334தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கல்வி, கலைகளிலும் முன்னேற்றம் பெற்றுச் சிறந்து
விளங்கியது. இவர் ஆட்சிக் காலம் ‘எட்டையாபுரத்தின் பொற்காலம்’
என்று கூறப்படுகிறது. இவர் கவி சுப்ரமணிய பாரதியாரின்
நெருங்கிய நண்பராக விளங்கினார். பாரதியை எட்டையாபுரத்தின்
அரசவைப் புலவராக்கினார். இவரது சபையில் சுப்புராம தீட்சிதர்
என்பவர் ‘ஆஸ்தான வித்துவானாக’ விளங்கினார். இம்மேதை
‘சங்கீத சம்பிரதாயப் பிரயதர்சினி’ என்ற சிறந்த இசை நூலை
எழுதினார்.

தாத்தா மகாராஜா என்ற வெங்கடேஸ்வர எட்டப்பர்
(1915-1928) ஆட்சிக் காலத்தில் நாடகத் தமிழ் வளர்ச்சியுற்றது.
‘தாத்தா மகாராஜா‘வின் புதல்வரான தங்கசாமி பாண்டியன்
என்ற ஜெகவீர ராம குமார வெங்கடேஸ்வர எட்டப்பர்
(1928-1934) ‘கலைக் காவலராக’ விளங்கினார்.

தங்கசாமி பாண்டியனின் புதல்வரான முத்துக் குமார
வெங்கடேஸ்வர எட்டப்பர்
எட்டையாபுரத்தின் கடைசி
மன்னராவார். இவர் ஒரு கட்டடக் கலைஞராக விளங்கினார்.
ஜமீன் ஒழிப்புச் சட்டப்படி, ஜமீன்முறை நீக்கப்பட்டபொழுது
எட்டையாபுரத்திலும் ஜமீன் ஆட்சிமுறை நீங்கியது.

பண்பாட்டுச் சின்னங்கள்

எட்டையாபுரத்தில், எட்டையாபுர மன்னர்கள் கட்டியுள்ள
அரண்மனை உள்ளது. ‘முடிசூட்டு மண்டபம்’
இவ்வரண்மனையின் அழகுமிக்க பகுதியாகும். ஜெகவீரராம
குமார வெங்கடேஸ்வர எட்டப்பர் அய்யன் ஆட்சிக் காலத்தில்
(1852-1858) இது கட்டப்பட்டது. ‘தர்பார் மண்டபம்’
அரண்மனையின் மற்றொரு முக்கிய பகுதியாகும்.

அரண்மனைக்கு அருகில் அமுதலிங்கேஸ்வரர்
கோவில்
உள்ளது. இக்கோவிலின் முன் சுவரில் ஆங்கிலத்
தளபதி ‘பானர்மேன்’ காலத்துத் தாமிரப் பட்டயம் ஒன்று உள்ளது.
சிவன் கோவிலிலிருந்து சிறிது தொலைவில் பெருமாள் கோவில்
உள்ளது.