பக்கம் எண் :

336தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து உடல் நலக்குறைவுடனிருந்த
பாரதி 1921, செப்டெம்பர் 11இல் காலமானார்.

பாரதியாரின் இனிய எளிய பாடல்களை யாவரும்
அறிவர். ‘பாஞ்சாலி சபதம்‘, ‘குயில் பாட்டு‘, ‘கண்ணன் பாட்டு’
ஆகிய இனிய நூல்களைப் படைத்து, தமிழிலக்கியத்தில்
மறுமலர்ச்சியை அவர் ஏற்படுத்தினார். இந்திய நாட்டின்
விடுதலை உணர்ச்சியைத் தமிழ் மக்களிடம் தம் எளிய
உணர்ச்சிமிக்க கவிதைகள் வாயிலாகத் தூண்டினார்.
பாரதியின் ‘அச்சமில்லை, அச்சமில்லை’ போன்ற பாடல்கள்
தமிழ் மக்களை இந்தியச் சுதந்தரப் போராட்டத்திற்குத் தட்டி
எழுப்பியது. இதனால் பாரதியார் ‘தேசியக் கவி’ என்ற புகழைப்
பெற்றார். மொழி இனம் ஆகிய தடைகளைக் கடந்து
மனிதகுலத்திற்கே உரிய ஒரு மாபெரும் கவியாகப்
பாரதியார் கருதப்படுகிறார்.

பாரதியார் பிறந்த வீடு எட்டையாபுரம் பெருமாள்
கோவிலின் அருகில் உள்ளது. இது தமிழ்நாடு அரசின்
தொல்பொருள் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பாரதி உபயோகித்த சில பொருள்கள், அவர் வாழ்க்கை
வரலாற்றைக் கூறும் விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றைப்
‘பாரதி இல்லத்தில்’ காணலாம்.

பாரதியின் நினைவாகப் ‘பாரதி மண்டபம்’ ‘கல்கி’
கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் முயற்சியின் காரணமாக
1948இல் எட்டையாபுரத்தில் கட்டப்பட்டது. பாரதியின் அழகிய
சிலையினை மையத்தில் கொண்ட இம்மண்டபத்தில் ஒரு நூல்
நிலையமும் உள்ளது. ஒவ்வோராண்டும் செப்டெம்பர் 11ஆம் நாள்
(பாரதி இயற்கை எய்திய நாள்) இங்கு பாரதி விழா சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது. தற்பொழுது இம்மண்டபம் தமிழ்நாடு
அரசின் பொறுப்பில் உள்ளது.

பாரதி 1882ஆம் ஆண்டில் பிறந்தவராதலால், 1981-82ஆம்
ஆண்டு, பாரதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டுள்ளது.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைமையிலான தமிழக அரசு, பாரதி நூற்றாண்டு விழாவை
எட்டையாபுரத்தில், 1981 டிசம்பர் 11,12,13 ஆகிய