கோவிலின் சிற்பச் சிறப்புகள்
1. கொடிக் கம்பத்தை அடுத்துள்ள
பகடை ராஜா,
வீரபத்திரன், கர்ணன், அர்ஜீனன் ஆகிய சிற்பங்களும்,
நந்தி மண்டபத்தை அடுத்துள்ள குறவன்-குறத்தி, மன்மதன்,
ரதிதேவி சிற்பங்களும் அற்புதமான கலைப் படைப்புகளாகும்.
2. சோமவார மண்டபத்திலுள்ள தூண்கள் அழகுமிக்கவை.
இம்மண்டபத்தின் முன்னுள்ள அல்லி-அர்ஜீனன், பவளக்கொடி
சிற்பங்கள் பார்ப்பவர்களை வியக்கச் செய்கின்றன. அல்லியின்
மூக்கைக் கிள்ளி பவளக்கொடி கையில் வைத்திருப்பது ஓர்
அழகிய காட்சியாகும்.
3. ஆறுமுக நயினார் சந்நிதியிலுள்ள சிற்பங்கள், சங்கிலி
மண்டபத்திலுள்ள சிற்பங்கள் ஆகியவையும் சிறப்புமிக்கவை.
ஊஞ்சல் மண்டபத்தில் 24 யாளிகளைக்கொண்ட தூண்கள்
வேலைப்பாடுமிக்கவை.
4. இக்கோவிலிலுள்ள தாமிர சபை சிவபெருமானுக்குரிய
ஐந்து சபைகளில் ஒன்றாகும். இத்தாமிர சபையின்
மரவேலைப்பாடு போற்றும்படியாக உள்ளது.
5. இக்கோவிலின் வாயில்பகுதியின் (குடபுறவாசல்)
உச்சியில் காணப்படும் மரச்சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.
6. இறைவன் கருவறையைச் சுற்றி, உட்பிரகாரச்
சுவர்களில் காணப்படும் மல்யுத்தக் காட்சி, முயலகன் சம்ஹாரம்
முதலிய புடைப்புச் சிற்பங்கள் அரிய வேலைப்பாடாகும்.
7. மணி மண்டபத்திலுள்ள இசைத்தூண்கள் தமிழ்நாட்டுச்
சிற்பிகளின் திறனை உலகிற்கு எடுத்தியம்புகின்றன. இவை
நின்றசீர் நெடுமாறன் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) காலப்
பணியாகக் கருதப்படுகிறது. நடுவில் பெரிய தூண், இதைச்
சுற்றி 48 கல்தண்டுகள், ஆகிய ஒற்றைக் கல்லினாலாகிய
இசைத்தூண் மணி மண்டபத்தின் இருபுறங்களிலும் உள்ளன.
இனிய ஒலி தரும் இந்த இசைத் தூண்கள் தமிழ்நாட்டிலேயே
மிகப் பழமையானதாகக் கருதப்படுகின்றன.
|