திருநெல்வேலி நெல்லையப்ப சுவாமி கோவில் தமிழ்
மக்கள் பண்பாட்டின் சிறப்பை விளக்கும் ஒரு சிறந்த சின்னம்
ஆகும்.
சொக்கநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், இவற்றின்
அருகிலுள்ள பெருமாள் கோவில், திருநெல்வேலியிலுள்ள
இதர முக்கிய கோவில்களாகும்.
பாளையங்கோட்டை
திருநெல்வேலி நகராட்சி
எல்லையை அடுத்து,
தாமிரவருணிநதியின் கீழ்க்கரையில் பாளையங்கோட்டை
நகராட்சி அமைந்துள்ளது. மதுரை நாயக்க மன்னர் விஸ்வநாதர்
காலத்தில் அவர் அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்குக்
கோட்டை கட்டப்பட்டு, பாளையம் கோட்டை என்ற நகர்
உதயம் ஆயிற்று என்பர். கி.பி. 18ஆம் நூற்றாண்டில்,
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் படையினர் மற்றும்
கிறித்தவ சபையினர் வருகையினால் பாளையங்கோட்டைப் பகுதி
பெரிதும் வளர்ச்சியடையத் தொடங்கியது எனலாம். கி.பி. 19ஆம்
நூற்றாண்டில் பல கிறித்தவ ஆலயங்களும், கல்வி நிலையங்களும்
இங்குத் தோன்றின. கி.பி. 1866இல் பாளையங்கோட்டை ஒரு
நகராட்சியாக அமைக்கப்பட்டது. கொக்கறைக்குளம்
பகுதியில்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,
சிறைச்சாலை, இதர சில அரசு அலுவலகங்கள் உள்ளன.
பாளையங்கோட்டையிலுள்ள நமது பண்பாட்டின்
சின்னங்கள்
பின்வருமாறு:
கோட்டையின் எஞ்சிய பகுதிகள்
மதுரை நாயக்கர் ஆட்சிக்
காலத்தில், பாளையங்
கோட்டையில், பலமிக்க கோட்டை எழுந்தது. திருநெல்வேலி
மாவட்டத்திலேயே கல்லினால் கட்டப்பட்ட
கோட்டை இது
ஒன்றே. மதுரைக்குத் தெற்கில் ‘பாளையங்கோட்டை’தான்
பலமிக்கதாக விளங்கியது. யூசுப் கான் பாளையங்கோட்டையை
மேலும் பலப்படுத்தினார். ஆனால், கிழக்கிந்தியக்
கம்பெனியார
பாளையக்காரர்களை அடக்கித் தமிழகத்தில்
ஆதிக்கம் பெறத்
|