தொடங்கியதிலிருந்து, (1801) இக்கோட்டை தனது
இராணுவ
முக்கியத்துவத்தை இழந்து அழியத் தொடங்கியது.
இதன்
கற்கள் திருநெல்வேலிப் பாலம் கட்டவும் ஸ்ரீவைகுண்டத்தில்
அணை கட்டவும் பயன்படுத்தப்பட்டன எனவும் அறியப்படுகிறது.
கோட்டையின் மேலவாசல் பகுதி ஓரளவு நல்ல நிலைமையில்
காணப்படுகிறது. மேலவாசல் கோட்டையின்
எஞ்சியப் பகுதி
தற்பொழுது காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகிறது.
தெற்கு
வாயிலின் எஞ்சிய பகுதியில் கட்ட பொம்மனின் சிலை
வைக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை நகரிலிருந்த கோட்டையின் மற்றொரு எஞ்சிய
பகுதியை நகரின் கிழக்கில் குடிநீர் சேமிப்புத் தொட்டி அருகில்
காணலாம். இக்கோட்டைப் பகுதியிலுள்ள ஓர்
அறையில்தான்
கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை சிறையில்
காவலில்
வைக்கப்பட்டார் எனப்படுகிறது. இக்கோட்டைப்
பகுதியின்
உத்திரங்களில் மீனின் உருவங்கள் காணப்படுகின்றன.
இக்கோட்டையில் தற்பொழுது அரசு வனத்துறை
அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்து ஆலயங்கள்
பாளையங்கோட்டை
நகரிலுள்ள முக்கிய வைணவ வழி
பாட்டுத் தலம் கோபால சுவாமி கோவில் ஆகும்.
பாளையங்
கோட்டை நகர் இக்கோவிலை மையமாகக் கொண்டுள்ளது.
இக்கோவிலிலிருந்து கிழக்கில் சிறிது தொலைவில் சிவன் கோவில்
உள்ளது. இக்கோவிலின் இறைவன், திரிபுராந்தீஸ்வரர்
எனப்படுகிறார். அம்மன், கோமதி அம்பாள் ஆவார்.
‘மேல வாசல்’ பகுதியில் பிரசன்ன விநாயகர் கோவிலும், இராமர்
கோவிலும் உள்ளன.
கிறித்தவ ஆலயங்கள்
குளோரிந்தா ஆலயம்
பத்மாவதி என்ற
இந்துப் பெண் தன் கணவன் இறந்த பின்
உடன்கட்டை ஏறி உயிர்துறக்க முற்பட்ட நேரத்தில்
ஆங்கிலேய
|