வீரன் ஒருவனால் காப்பாற்றப்பட்டார். பின் அப்பெண்,
குளோரிந்தா என்ற கிறித்தவப் பெயரைப் பெற்றார் (கி.பி. 1780).
இவர் பாளையங்கோட்டையில் ஒரு சிறு ஆலயத்தைக் கட்டினார்.
இவ்வாலயம் குளோரிந்தா ஆலயம் எனப்படுகிறது.
“நெல்லைத் திருச்சபையின் தாய்” என்று குளோரிந்தா
அழைக்கப்படுகிறார்.
(குளோரிந்தா ஆலயத்தின் அருகிலுள்ள
கல்லறைத்
தோட்டத்தில், சாமுவேல் சாயர், மற்றும் பலரின்
கல்லறைகள்
உள்ளன.)
கிறிஸ்து ஆலயம்
குளோரிந்தா ஆலயத்திற்கு அருகில்
‘கிறிஸ்து ஆலயம்’
உள்ளது. இவ்வாலயம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின்
ஆதரவில், ஐரோப்பிய இராணுவத்தினருக்காகக் கி.பி. 1856இல்
கட்டப்பட்டது. இதன் கூரை 1973இல் புதுப்பிக்கப்பட்டது.
இவ்வாலயத்திற்கு எதிரில் ஆங்கிலேயரின் பல கல்லறைகள்
உள்ளன. இவற்றுள் ஒன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக
இருந்து மணியாச்சியில் வாஞ்சிநாதரால் சுடப்பட்டுக் காலமான
(கி.பி. 1911) ஆஷ் என்பவரின் கல்லறையாகும். கிறிஸ்து
ஆலயத்தை அடுத்துள்ள வீதி ‘ஆங்கிலக் கோவில் தெரு’
எனப்படுகிறது. இவ்வாலயத்திலிருந்து சிறிது தொலைவில் இதே
பெயருள்ள (கிறிஸ்து ஆலயம்) மற்றொரு ஆலயம் உள்ளது.
இவ்வாலயம் கி.பி. 1858இல் தோற்றுவிக்கப்பட்டது.
கிறிஸ்து ஆலயத்திற்கு அருகில் மூன்று பெரிய கல்வி
நிலையங்கள் உள்ளன. அவை : 1. 1878இல் தோற்றுவிக்கப்பட்ட
புனித யோவான் கல்லூரி (St. John‘s
College) 2. கி.பி.
1880இல
தோற்றுவிக்கப்பட்ட புனித சேவியர் உயர்நிலைப் பள்ளி, 3. 1923இல்
தோற்றுவிக்கப்பட்ட புனித சேவியர் கல்லூரி.
பரிசுத்த திரித்துவ ஆலயம்
பாளையங்கோட்டையில் ‘முருகன் குறிச்சி‘யிலுள்ள
கிறித்தவர்களுக்காக, இரேனியஸ் (Rhenius)
என்ற பெரியாரால்
|