பக்கம் எண் :

380தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

அதங்கோடு

குழித்துறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அதங்கோடு
உள்ளது. இங்குப் பழங்கால சாத்தன் கோவில் உள்ளது.
சாத்தன் என்றால் சமணரைக் குறிக்கும். இன்று இக்கோவில்
கண்டன் சாஸ்தா ஆலயம்
என அழைக்கப்படுகிறது. கருவறை
முன்னுள்ள தூணில் செதுக்கப்பட்ட வரிசை விளக்குகள் குடை
உருவில் உள்ளன. இக்கோவிலைச் சுற்றிப் பரந்த ஆலமரம்
உள்ளது. (இதைச் சென்னை அடையாற்றிலுள்ள ஆலமரத்தை
விடச் சிறந்தது என்பர்.) அருகில் ‘காய்க்காத ஈத்தமரம்’
உள்ளது. இவ்வூரில்தான் அதங்கோட்டாசான் வாழ்ந்தார் என்றும்,
இதன் அண்மையில் ஓடும் ஆற்றின் தென்கரையில் உள்ள
காப்பிக்காடு (காப்பியக்காடு-காப்பியக்குடி) என்ற ஊரில் உள்ள
பழமையான சிவன் கோவிலைத் தொல்காப்பியர் வழிபட்டார்
என்றும் கூறப்படுகிறது. தொல்காப்பிய அரங்கேற்று விழாவில்
தலைமை தாங்கியவர் அதங்கோட்டாசான் ஆவார்.

அதங்கோட்டிலிருந்து தென்மேற்காக 5 கி.மீ. தொலைவில்
முன்சிறை உள்ளது. இராவணன் சீதையைச் சிறை வைத்த இடம்
என்பதால் ‘முன்சிறை’ என்று பெயர் பெற்றதாம். இவ்வூர் அருகில்
பாயும் ஆற்றின் கிழக்குப் பகுதியில் பாறைமேல் வடிக்கப்பட்ட
சிவாலயம் உள்ளது. இதன் மணி, கொடிக்கம்பம் புகழ்மிக்கவை.

பத்மனாபபுரம்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய நகரம்
பத்மனாபபுரம் ஆகும். நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம்
செல்லும் சாலையில் 14 கி.மீ. தொலைவிலுள்ள தக்கலையிலிருந்து
2 கி.மீ. கிழக்கில் பத்மனாபபுரம் உள்ளது. பத்மனாபபுரத்தின்
பழைய பெயர் கல்குளம் ஆகும். அது வேணாட்டின் தலைநகராக
இருந்தது. கி.பி. 1744இல் மார்த்தாண்டவர்மன் என்ற மன்னர்
வேணாட்டின் பெயரைத் திருவிதாங்கூர் என்று ஆக்கி அதை
முழுவதையும் பத்மனாப சுவாமிக்கு அர்ப்பணம் செய்தார். இதன்
நினைவாகக் கல்குளத்திற்குப் பத்மனாபபுரம்