என்ற பெயரை அம்மன்னர் சூட்டினார் என்று கூறப்படுகிறது.
கேரள மன்னர்களின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தில்,
அம்மன்னர்களது அரண்மனை இன்று நினைவுச் சின்னமாக
உள்ளது. சுமார் 4 கி.மீ. சுற்றளவுள்ள கற்கோட்டை இந்த
அரண்மனையைச் சூழ்ந்துள்ளது.
பத்மனாபபுர அரண்மனை கேரளக் கட்டடக்கலைக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அரண்மனையின்
அறைகள், கூடங்கள் ஆகியவை முற்றிலும் மரங்களாலானவை.
மூன்று மாடிகளைக்கொண்ட உப்பரிகை அரண்மனையின்
முக்கிய பகுதியாகும். இம்மாளிகையின் கீழ் அறைகளில்,
ஒரே கல்லினாலான கட்டில், 13 பெரிய ஊறுகாய்ப் பானைகள்
ஆகியவை உள்ளன.
அரண்மனையின் மற்றொரு பகுதியில்
நவராத்திரி
மண்டபம் உள்ளது. கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்த
மண்டபம்
பயன்படுத்தப்பட்டது. இம்மண்டபத்தில் சரஸ்வதி
கோவில்
உள்ளது. இம்மண்டபத்தின் அருகில் பல மரச்சிற்பங்கள்
காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. இரத
ஓட்டி,
துவாரபாலர்கள், மன்மதன், ரதிதேவி இன்னும்
இங்குள்ள
பல சிற்பங்கள் யாவும் ஒரு மரத்தேரிலிருந்து எடுக்கப்பட்டதைக்
காட்டுகிறது. இம்மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள்போல்
பளபளப்புடன் காட்சியளிக்கின்றன.
மாளிகையின் கடைசி மாடியில்
வண்ண ஓவியங்கள் உள்ளன.
இவை கி.பி. 17-18ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும்.
இவை கேரளக் கலைஞர்களின் கை வண்ணத்தைக் காட்டுகின்றன.
எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் இரு (எண்ணெய்)
விளக்குகள். இம்மாளிகையின் மற்றொரு முக்கிய அம்சம்.
கேரள மக்களின்
பண்பாட்டுப் பெருமையைக் கூறும்
சிறந்த சின்னமாக பத்மனாபபுர அரண்மனை உள்ளது.
இவ்வரண்மனைப்பகுதி
தமிழ்நாட்டின் ஆட்சியில்
இருப்பினும், அரண்மனை மட்டும் கேரள மாநில
அரசின்
தொல்பொருள் துறையினர் பொறுப்பில் உள்ளது.
|