பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்41

இக்கோவிலின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள நான்கு
கால் மண்டபத்தின் உயரே மூன்று மூலைகளில் காணப்படும்
கல்வளையங்கள் சிற்ப வேலைபாடுமிக்கவை.

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் சாந்தோமைத்
தாக்கியபொழுது, டச்சு வியாபாரிகள் இக்கோவிலின் முன்
பகுதியில் சிறிதுகாலம் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு
புகழ்மிக்க சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். சிவபெருமானை
அம்பிகை இங்கு மயில் வடிவம்கொண்டு பூசித்தார் என்பது
புராணச் செய்தியாகும். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
திருஞானசம்பந்தரும், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
அருணகிரிநாதரும் கபாலீஸ்வரர் கோவிலைப் பற்றிப் பாடியுள்ளனர்.
கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை இக்கோவில் மயிலாப்பூர்
கடற்கரையில் இருந்திருக்க வேண்டும் என்றும், பின் இது
அழிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இன்று நாம்
காணும் கபாலீஸ்வரர் கோவில் கி.பி. 16ஆம் நூற்றாண்டில்
விஜயநகர அரசு காலத்தில் புதிதாகக் கட்டப்பட்டதென
அறியப்படுகிறது. இக்கோவிலின் கோபுரம் கி.பி. 1906இல்
கட்டப்பட்டது.

கோவிலின் கருவறையில் கபாலீஸ்வரர் ‘லிங்க’ வடிவில்
காட்சி தருகிறார். அம்மனின் சந்நிதியில் காட்சியளிப்பவர்
கற்பகவல்லி
ஆவார். முருகனுக்கு இக்கோவிலில் ஒரு அழகிய
சந்நிதி உள்ளது. இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி, முருகன்
சந்நிதியாகவும் முற்றிலும் கல்லினாலானவை சந்நிதிச் சுவர்கள்
சிற்ப வேலைபாடுமிக்கவை.

கோவிலின் எதிரிலுள்ள தெப்பக்குளம் அளவில் மிகவும்
பெரியதாகும். மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஒரு கோவில்
உள்ளது.

சென்னை நகரின் மத்தியிலுள்ள (பூக்கடை காவல்
நிலையம் அருகில்) சென்னகேசவப் பெருமாள் கோவில்,
மல்லீஸ்வரர்