பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்43

திருவொற்றியூர்

சென்னை நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் திருவொற்றியூர்
உள்ளது. இங்கு ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இது
தொண்டை மண்டலத்திலுள்ள ஒரு பழமைமிக்க சிவ வழிபாட்டுத்
தலமாகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய
சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலின் மத்தியிலுள்ள கருங்கல்லாலான விமானம்
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி. 1012-44)
நிறுவப்பட்டதாகும். பிற்காலச் சோழ மன்னர்கள் பலர்
இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இம்மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுகள் பல இக்கோவிலில்
உள்ளன.

ஆர்க்காட்டு நவாப்பிடம் அமைச்சராகப் பணியாற்றிய
சமயப் பற்றுள்ள ஒரு இந்து இக்கோவிலின் சில பகுதிகளைக்
கட்டியதாக அறியப்படுகிறது. ஒற்றீசுவரர் சந்நிதிக் கட்டடம்
T.P.இராமசாமிப் பிள்ளை என்பவரால்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோவிலின் ஒரு பகுதியில்
தியாகராஜர் சந்நிதி
உள்ளது. இச்சந்நிதி முன்னுள்ள
மண்டபத்திலுள்ள இரு தூண்களில் உள்ள குதிரைமீது
அமர்ந்திருக்கும் நிலையிலுள்ள இரு வீரர்களின் சிற்பங்கள்
உள்ளன. இவை விஜயநகர அரசுக் காலக் கலையம்சமாகும்.

மூலக் கோவிலின் உள்ளும், பிரகாரங்களைச் சுற்றியும்
எழுப்பப்பட்டுள்ள தூண்களிலும், கீழே பாவப்பட்டுள்ள சதுரக்
கற்களிலும் கல்வெட்டுகள் பல பொறிக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் கோபுரம் பொலிவுடன் காட்சி தருகிறது.

ஒற்றீசுவரர் சந்நிதி முன் ஸ்ரீபதஞ்சலி, ஸ்ரீவியாக்ரபாதர்
ஆகிய முனிவர்களின் உருவங்களைக் கொண்ட கற்றூண்கள்
உள்ளன. சந்நிதி முன்னுள்ள மண்டபத்தின் இரு வரிசைகளிலும்
பின்வரும் பெயர்களைக் கொண்ட கற்றூண்கள் உள்ளன.
திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள்,
சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்,
ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிருங்கரிஷி,