திருவேற்காடு பேருந்து நிலையத்திற்கு அருகில் புகழ்
பெற்ற தேவிகருமாரியம்மன் கோவில் உள்ளது.
பல்லவபுரம் சென்னையிலிருந்து 21 கி.மீ. தொலைவில்
பல்லவபுரம் (பல்லாவரம்) உள்ளது. பல்லவர்களுடன் முன்பு
இருந்த தொடர்பினைக் குறிக்கும் வகையில் இவ்வூர் பல்லவபுரம்
என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குப் பல்லவ
மன்னன் மகேந்திரவர்மனால் (கி.பி. 600-630)
அமைக்கப்பட்ட
குடைவரைக் கோவில் உள்ளது. மகேந்திரவர்மனால்
அமைக்கப்பட்ட இதுபோன்ற குடைவரைக் கோவில்கள்
திருச்சி,
மகேந்திரவாடி முதலிய இடங்களில் உள்ளன. பல்லவபுரக்
குடைவரைக் கோவில் இன்று ஒரு மசூதியாக இஸ்லாமியர்களால்
பயன்படுத்தப்படுகிறது.
பல்லாவரத்தில் கி.பி. 1863இல்
இராபர்ட் பு ஸ்புட் என்ற
அறிஞரால் பழைய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழகத்தின் பழங்காலப் பண்பாட்டினை அறிய இக்கற்கருவிகள்
முக்கியச் சான்றுகளாக உள்ளன.
பல்லவபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில்
திருநீர்மலை
என்ற இடம் உள்ளது. இது ஒரு புகழ் பெற்ற வைணவத்
தலமாகும்.
பூதத்தாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்ற
தலம்.
இங்குள்ள மலைமீது ரெங்கனாத சுவாமி கோவில் உள்ளது.
மலையின் அடிவாரத்திலும் ஒரு பெருமாள் கோவில்
உள்ளது.
பல்லவபுரத்திற்கு அருகில் திருநாகேஸ்வரம் என்ற கிராமத்தில்
சேக்கிழாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் சிவன் கோவில்
உள்ளது. சேக்கிழார் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள
குன்றத்தூரில் பிறந்தார். அநபாய சோழன் என்ற முதலாம்
குலோத்துங்க சோழனின் அமைச்சராய் விளங்கினார்.
திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) என்ற சிறந்த தமிழ்
நூலை இவர் இயற்றினார்.
|