பக்கம் எண் :

46தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சென்னை நகரிலுள்ள புதிய சமணர் கோவில்

சென்னை நகரிலும், சென்னையை அடுத்துள்ள புழல்
முதலிய இடங்களிலும் பல சமணக் கோவில்கள் உள்ளன.
இவற்றுள் திருவல்லிக்கேணியிலுள்ள (3, பி.வி. நாயக்கர் தெரு)
சமணர் கோவில் மிக்க புகழ் பெற்றதாக உள்ளது. இது சென்னை
நகரிலுள்ள புதிய சமணர் கோவிலாகும். இக் கோவில் 1980ஆம்
ஆண்டு (பிப்ரவரி, 8) வழிபாட்டிற்குத் திறக்கப்பட்டது. இக்கோவில்
சமண சமயத்தின் முதல் தீர்த்தங்காரரான ஆதிநாதருக்காக
அமைக்கப்பட்டதாகும். ஆதிநாதரின் திருவுருவம் அருகில்
சாந்திநாதர், மகாவீரர்
என்ற இரு தீர்த்தங்காரர்களின்
திருவுருவங்களும் உள்ளன. மகாவீரரின் முக்கிய சீடரான
கௌதமி சுவாமியின்
சிலையும் இக்கோவிலில் உள்ளன.
சமணத் திருவுருவச் சிலைகள் யாவும் இராஜஸ்தானிலிருந்து
கொண்டுவரப்பட்டவை ஆகும். இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள
மக்ரானா
என்னுமிடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சலவைக்
கற்களால்
இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின்
கட்டுமானம் வியக்கத்தக்க முறையில் உள்ளது. முழுவதும்
சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோவில் நமது
பண்பாட்டின் முக்கிய சின்னம் ஆகும்.

சென்னை நகரிலுள்ள முக்கிய கிறித்தவ ஆலயங்கள்

புனித மேரி ஆலயம்

புனித ஜார்ஜ் கோட்டையின் தென்பகுதியில் புனித மேரி
ஆலயம்
உள்ளது. இது கி.பி. 1680இல் கிழக்கிந்தியக்
கம்பெனியாரால் எழுப்பப்பெற்றதாகும். இக்கிறித்தவ
ஆலயம் இந்தியாவிலுள்ள மிகப் பழமையான ஆங்கிலக்
கிறித்தவ ஆலயம்
ஆகும். இறந்த பல ஆங்கிலேயர்களின்
நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் (Tablets)
இவ்வாலயத்தில் உள்ளன. இந்த ஆலயத்தினுள் இங்கிலாந்து
நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் அழகிய பல
சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகள்
ஆகும். இவ்வாலயத்தில்தான் ஆர்க்காட்டு வெற்றி வீரர்
இராபர்ட் கிளைவின்
திருமணம் நடந்ததென்பர்.