புனித ஆண்ட்ரு ஆலயம்
எழும்பூர் இரயில் நிலையத்திற்கு
அருகில் புனித
ஆண்ட்ரு ஆலயம் உள்ளது. இது கி.பி. 1820இல் கட்டப்பட்டது.
(1820 என்ற வருடத்தைக் குறிக்கும் ரோம எண்கள் “MDCCCXX”
கட்டடத்தின் வெளிப்பகுதியில் பெரிய அளவில் காணப்படுகின்றன.)
இந்த ஆலயம் மேஜர் ஹேவிலாண்ட் என்ற ஆங்கிலப்
பொறியியல்
வல்லுநரின் மேற்பார்வையில் கட்டப்பட்டதாகும். இவ்வாலயத்திலுள்ள
நீண்ட பெரிய தூண்கள், கட்டடத்தின் உட்பகுதியிலுள்ள
அரைக்கோள் வடிவத்தைக்கொண்ட வழிபாட்டு அறை, குறுகிய
நீண்ட கோபுர அமைப்பு, சில ஆங்கிலேயரின் நினைவாக
அமைக்கப்பட்டுள்ள பளிங்குச் சிற்பங்கள் ஆகிய யாவும்
கலைச் சிறப்புமிக்கவை. புனித பீட்டர், புனித ஆண்ட்ரு
ஆகியோரின் திரு உருவங்களைக் கண்ணாடியில் வண்ண
ஓவியங்களாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ
கலைஞர்கள் தீட்டியுள்ளனர்.
புனித ஜார்ஜ் பேராலயம்
அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலம் அருகில்
புனித ஜார்ஜ் பேராலயம் உள்ளது. இவ்வாலயம்
கி.பி. 1815இல் கட்டப்பட்டது. ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின் முக்கிய பொறியியல் வல்லுநர் கால்டுவெல்
என்பவரால் திட்டமிடப்பட்டு, அவரது உதவியாளர்
ஹேவிலாண்ட் என்பவரால் இது கட்டி முடிக்கப்பட்டது.
இவ்வாலயம் கிறித்தவக் கட்டடக் கலைக்கும், பளிங்குச்
சிற்பங்களுக்கும் சிறந்த களஞ்சியமாக உள்ளது. இதன் அழகிய
கோபுர அமைப்பு, தூண்களின் கவர்ச்சி, பளிங்குச் சிற்பங்களின்
அழகு, பதிப்புக் கற்களின் அமைப்பு ஆகியவை யாவும்
சிறப்புமிக்கவை. இங்குள்ள பளிங்குச் சிற்பங்கள் இங்கிலாந்து
நாட்டுச் சிற்பிகளின் உன்னதப் படைப்புகள் ஆகும்.
சென்னையில் பணியாற்றிய சில பாதிரியார்களின் சிற்ப
உருவங்கள், பளிங்கில் கதை கூறும் வண்னம் இங்கு உள்ளன.
கையில் வேத நூலுடன் ஒரு பாதிரியார் ஒரு இந்துவை
ஆசீர்வாதம் செய்யும் சிற்பம், இந்துத்
|