பக்கம் எண் :

48தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

தம்பதிகளை ஆசீர்வாதம் செய்யும் மற்றொரு பாதிரியாரின்
சிற்பம், ஜேம்ஸ் ஸ்டீபன் லூசிங்டன் என்ற ஒரு அதிகாரி
பேனாவினால் குறிப்பெழுதும் காட்சி ஆகிய பளிங்குச் சிற்பங்கள்
யாவும் பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்கின்றன.

அரண்மனைக்காரத் தெரு தேவாலயம்

சென்னை உயர்நீதி மன்றக் கட்டடத்திற்கு எதிரிலுள்ள
அரண்மனைக்காரத் தெருவில் (Armenian street)
சம்மனசுக்களின் இராக்கினியின் ஆலயம்
என்ற கத்தோலிக்க
ஆலயம் (Co - Cathedral of St. Mary of Angels) உள்ளது.
இவ்வாலயம் கி.பி. 1642இல் தோற்றுவிக்கப்பட்டது.
இவ்வாலயத்திலுள்ள வழிபாட்டிற்குரிய திருவுருவங்கள்,
பல பளிங்குச் சிற்பங்கள், பதிப்புக்கற்கள் ஆகிய யாவும்
கலைத்திறன்மிக்கவை.

சாந்தோம் தேவாலயம்

சாந்தோமில் ஒரு புகழ் பெற்ற கத்தோலிக்கக் கிறித்தவ
ஆலயம் உள்ளது. இது புனித தாமஸ் ஆலயம் எனப்படுகிறது.

இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான புனித தாமஸ்
கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்து
மயிலாப்பூரில் தங்கி, கிறித்தவ சமயத்தைப் போதித்தார் என்றும்,
இவரது போதனைகளை விரும்பாத சிலரால் இவர் பரங்கிமலையில்
கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. புனித தாமஸ்
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு கல்லறை எழுப்பப்பட்டது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் மார்க்கோபோலோவும்,
கி.பி. 1425இல் நிகோலோ கொண்டியும் இக்கல்லறைக்கு
வருகை தந்தனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர் வாணிபத்தில் ஆதிக்கம்
பெறுவதற்கு முன்பாகவே, சென்னை சாந்தோம் பகுதியில்
போர்ச்சுகீசியர்கள் குடியேறி வாணிபம் புரிந்தனர்.
போர்ச்சுகீசியப் பாதிரியார்கள், தாமஸ் முனிவர் கல்லறைமீது
ஒரு ஆலயத்தை