எழுப்பினர் (1523). இன்று சாந்தோமில் நாம் காணும் புனித
தாமஸ் ஆலயம், புனித தாமஸ் கல்லறைமீது போர்ச்சுகீசியர்கள்
கட்டிய ஆலயப்பகுதியில் கி.பி. 1896இல் விரிவாகக்
கட்டப்பட்டதாகும். புனித சவேரியார் இங்கு கி.பி. 1545இல்
நான்கு மாதங்கள் தங்கினார்.
சாந்தோம் தேவாலத்தின் கோபுர அமைப்பு,
‘கோதிக்’
கலையம்சங்கள், கண்ணாடியில் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்கள்
ஆகியவை கலைச்சிறப்புமிக்கவை. இவ்வாலயத்தின் கோபுரம்
47 மீட்டர் உயரமுள்ளது. ஆலயத்தின் வழிபாட்டு அறையின்
பக்கச் சுவர்களில் ‘குற்றவாளி’ எனத் தண்டனை வழங்கப்பட்ட
பின் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணமடையும்வரை
உள்ள வாழ்க்கைச் சம்பவங்களைக் காட்டும் வண்னச் சிற்பங்கள்
உள்ளன.
வழிபாட்டு அறையின் நடுவில் புனித தாமஸின் கல்லறை
எழிலுடன் காட்சியளிக்கிறது.
லஸ், இராயப்பேட்டை, இராயபுரம், எழும்பூர், ஜார்ஜ் நகர்
வேப்பேரி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களிலும் சிறந்த
ஆலயங்கள் உள்ளன.
சென்னை நகரிலுள்ள பள்ளி வாசல்களும்
தர்காக்களும்
திருவல்லிக்கேணி பெரிய சாலையிலுள்ள
வாலாஜா பள்ளி
வாசல் சென்னை மாநகரின் மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும்.
கர்நாடக நவாப்பான முகமதலி வாலாஜா என்பவரால்
கி.பி. 1795இல் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இப்பள்ளிவாசலை
அடுத்து மௌலானா பஹ்ருல் உலூம் என்ற பெரியார்
அடங்கியுள்ள கல்லறை உள்ளது. இதனருகில் வேறு சில
கர்நாடக நவாபுகளும் இஸ்லாமியப் பெரியார்களும்
அடங்கியுள்ள கல்லறைகளும் உள்ளன. சென்னை மாநாகராட்சியின்
‘ரிப்பன்’ கட்டடங்கள் அருகிலுள்ள பெரியமேட்டுப்
பள்ளிவாசல் சென்னை நகரிலுள்ள மற்றொரு முக்கிய
பள்ளிவாசல் ஆகும்.
|