கி.பி. 600 முதல் 850 வரை தமிழக வரலாற்றில் முக்கிய
இடம் பெறுபவர்கள் பாண்டியர்களும் பல்லவர்களும் ஆவர்.
முதலாம் மகேந்திரவர்மன் (600-630), முதலாம் நரசிம்மவர்மன்
(630-655), இராஜசிம்மன் (695-722) ஆகியோர் பல்லவ
மன்னர்களில் புகழ் பெற்றவர்கள். பல்லவ மன்னர்கள் ஆட்சிக்
காலத்தில் தமிழகத்தின் சிற்பக்கலை உன்னத நிலையை
அடைந்தது. பல்லவர் ஆட்சிப் பெருமைக்கு அழியாச்
சான்றுகளாகக் காஞ்சிபுரமும் மாமல்லபுரமும் உள்ளன. பல்லவர்
ஆட்சிக் காலத்தில் சோழர்கள் கும்பகோணத்தை அடுத்த
பழையாறை
என்னும் நகரில் சிற்றரசராய் இருந்தனர். பல்லவர் காலத்தில்
தமிழகத்தின் தெற்கில் பாண்டியர்கள் ஆதிக்கம் செலுத்தியதால்
பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே போர்கள்
நடந்தன. இக்காலப் பாண்டியர்களில் புகழ் பெற்றவர் கொங்கு
நாட்டைக் கைப்பற்றிய கோச்சடையன் ரணதீரன் (700-730),
வட இலங்கையைக் கைப்பற்றிய சீமாறன் சீவல்லபன் (815-862)
ஆவர்.
பிற்காலச் சோழர் ஆட்சி
கி.பி. 9ஆம் நூற்றாண்டின் மத்தியில் சோழர்கள் மீண்டும்
வலிமை பெற்றனர். விஜயாலயன், ஆதித்தன் ஆகிய மன்னர்கள்
இந்த எழுச்சிக்குக் காரணமாவார்கள். ஆதித்தசோழன் (871-907)
கடைசிப் பல்லவ மன்னர் அபராஜிதனைப் போரில் வென்று
பல்லவ நாட்டைக் கைப்பற்றினார். பிற்காலச் சோழர்கள்
கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் 13ஆம் நூற்றாண்டு
வரை சிறப்புடன் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர். தஞ்சாவூரையும்
பின் கங்கை கொண்ட சோழபுரத்தையும் தங்கள் தலைநகராகக்
கொண்டனர். பிற்காலச் சோழர்களில் புகழ்மிக்க மன்னர்கள்
முதலாம் இராஜராஜன் (985-1016), முதலாம் இராஜேந்திரன்
(1012-1044), முதலாம் குலோத்துங்கன் (1070-1120) மூன்றாம்
குலோத்துங்கன் (1178-1216) ஆகியோர் ஆவர், முதலாம்
இராஜராஜன் இலங்கையின் வட பாதியை வென்று தமிழ்
மக்களின் பெருமையைக் கடல் கடந்து பரப்பினார். முதலாம்
இராஜேந்திரன் இலங்கை முழுவதையும் வென்றார். இவர்
|